மெக்சிகோ நாட்டிலும் ‘பெங்களூர் ஸ்பெஷல்’ நையாண்டி...!

news18
Updated: September 12, 2019, 12:53 PM IST
மெக்சிகோ நாட்டிலும் ‘பெங்களூர் ஸ்பெஷல்’ நையாண்டி...!
வீடியோ காட்சிகள்
news18
Updated: September 12, 2019, 12:53 PM IST
சாலையில் உள்ள பள்ளங்களை கிண்டல் செய்து பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் விண்வெளி உடையுடன் சாலையில் களமிறங்கிய வீடியோவைப் போல மெக்சிகோவிலும் ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

சந்திராயன் 2 செயற்கைக்கோள் நிலவின் அருகே சென்று கொண்டிருந்த நேரத்தில், விண்வெளி வீரர் ஒருவர் சாலையில் நடப்பது போல வெளியான ஒரு வீடியோ சமீபத்தில் டிரெண்ட் ஆனது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த வீடியோ பெங்களூரில் எடுக்கப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த பாதல் நஞ்சுண்ட சாமி என்பவர் பெங்களூரில் உள்ள சாலைப் பள்ளங்களை கிண்டல் செய்து விண்வெளி வீரருக்கான உடையுடன் அவர் சாலையில் இறங்கி நடந்தார். வீடியோவின் தொடக்கத்தில் அது ஏதோ வேற்று கிரகம் என்றே எண்ணத் தோன்றும்.
Loading...பின்னால் ஒரு ஆட்டோ போகும் போதே, அது சாலை என்பது தெரியவந்தது. வைரலாக பரவிய இந்த வீடியோவைப் பார்த்து மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவர் பாதலை தொடர்புகொண்டு இதே போல நானும் வீடியோ செய்யப்போகிறேன் என்று கூறி, அதனை நிறைவேற்றிக்காட்டியுள்ளார்.இந்த வீடியோவும் இப்போது வைரலாக பரவி வருகின்றது.

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...