மைதானத்தில் சிலி வீரருடன் மெஸ்ஸி கடும் மோதல்! டிரெண்டாகும் ஆக்ஷன் வீடியோ

Web Desk | news18
Updated: July 7, 2019, 7:53 PM IST
மைதானத்தில் சிலி வீரருடன் மெஸ்ஸி கடும் மோதல்! டிரெண்டாகும் ஆக்ஷன் வீடியோ
ரெட் கார்டு கொடுத்த நடுவர்
Web Desk | news18
Updated: July 7, 2019, 7:53 PM IST
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில், நட்சத்திர வீரரான மெஸ்ஸியும் - சிலி அணியின் கேரி மெண்டலும் ஆட்டத்தின் நடுவே மோதிக் கொண்டதை அடுத்து, இருவரும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அர்ஜென்டினா மற்றும் சிலி அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றபோது, அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி, கேரி மெண்டலிடம் இருந்து பந்தை லாவகமாக எடுத்து செல்ல முயற்சி செய்தார்.

அப்போது கேரி மெண்டல் மெஸ்ஸியுடன் நேருக்கு நேர் மோதியதை அடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இதனையடுத்து, இருவரும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அர்ஜெண்டினாவை சேர்ந்த 27 வயதான மெஸ்ஸி 14 வருடங்களுக்கு பிறகு ரெட்கார்டு மூலம் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்வை அடுத்து மெஸ்ஸிக்கு ஆதரவாகாவும், விமர்சித்தும் பலர் ட்விட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.Also Watch

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...