முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / அண்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக திடீரென பிங்க் நிறமாக மாறிய வானம்

அண்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக திடீரென பிங்க் நிறமாக மாறிய வானம்

இளஞ்சிவப்பு வானம்

இளஞ்சிவப்பு வானம்

சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியா, மற்றும் நியூஸிலாந்து பகுதிகளில் வளிமண்டல வேதியல் வினையால் இளஞ்சிவப்பு வானம் காணப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :

வழக்கத்திற்கு மாறாக அண்டார்டிகா கண்டத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் வானம் ஒளிரும் படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதே போன்ற சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து பகுதிகளிலும் காணப்பட்டது.

அண்டார்டிகா மக்கள், உமிழும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற வானத்தைக் கண்டனர். அடுக்கு மண்டல ஸ்ட்ராடோஸ்பியர் பகுதியில் ஏற்பட்ட வேதியல் நிகழ்வால் ஏற்பட்ட காட்சி என்று கூறப்பட்டது. இது குறித்து நியூசிலாந்தின் நீர் மற்றும் வளிமண்டலத்திற்கான தேசிய நிறுவனம் (நிவா) அறைந்து வருகிறது.

பரவுகிறது ‘மார்க்பர்க்' வைரஸ்..கடுமையாக இருக்கும்..உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கடந்த ஜனவரி 2022 இல் தெற்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹா'பாய் என்ற எரிமலை வெடித்து 50 கிலோமீட்டர் வரை வானத்தில் நெருப்புக்குழம்பு மற்றும் சாம்பலைக் கக்கியது. இதுவரை கண்டிராத பெரும் வெடிப்பாக இது கருதப்பட்டது. இதன் காரணமாக இதை சுற்றி அமைந்துள்ள வளிமண்டல பகுதிகளில் சாம்பல் கலந்து வானிலை மாற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியா, மற்றும் நியூஸிலாந்து பகுதிகளில் வளிமண்டல வேதியல் வினையால் இளஞ்சிவப்பு வானம் காணப்பட்டது. அதன் படங்கள் இணையத்தில் பெரிதும் பரவின. அண்டார்டிகா பகுதியில் இது போன்ற வானம் தென்பட்டுள்ளது.

குளிர்காலஆராய்ச்சிக்காக அண்டார்டிகா ஸ்காட் தளத்தில் தங்கியிருக்கும் நியூசிலாந்தின் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர் ஸ்டூவர்ட் ஷா, “பொதுவாக குளிர்காலத்தின் நடுப்பகுதியில், அண்டார்டிகா ஒரு குறுகிய கால அந்தியைத் தவிர, கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டாக இருக்கும். நண்பகல் வேளையில், அடிவானம் மங்கலாகத் தெரியும்" என்று கூறினார். ஆனால் இந்த ஆண்டு இந்த அழகிய வானைக் காணும் வரம் கிடைத்தது என்றார்.

இதற்கிடையில், சீனாவில் உள்ள ஸ்வுஷான் நகர கரையோர மக்கள் மர்மமான இரத்த சிவப்பு வானத்தை கண்டது குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

First published:

Tags: Antarctica, Pink, Volcano