ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் இந்தியாவின் சிஇஓ ஆட்டோவில் பயணம்... வியப்பில் நெட்டிசன்கள்.!

சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் இந்தியாவின் சிஇஓ ஆட்டோவில் பயணம்... வியப்பில் நெட்டிசன்கள்.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Trending | யாராக இருந்தாலும் அனைத்துக்காலக்கட்டத்திற்கும் ஏற்றவாறு உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக வலம் வருகிறார் மார்டின் ஷ்வெங்க்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pune, India

நம்முடைய வாழ்க்கையில் பணம், சொகுசு கார்கள் என பல ஆடம்பர விஷயங்கள் இருந்தாலும் சில நேரங்களில் நம்மையும் சாமானிய மக்களாய் மாற்றக்கூடிய நிலைமை ஏற்படும். ஆனால் எதையும் அலட்டிக்கொள்ளாமல் தனக்குரிய வேலையை சரியாக முடித்துவிட வேண்டும் என்பதற்காக எந்த நிலையையும் நாம் அனுபவிப்பதில் எவ்வித தவறும் இல்லை என்பதை ஒரு புகைப்படத்தின் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் இந்தியாவின் சிஇஓ மார்ட்டின் ஷ்வெங்க்.

பொதுவாக பெருநகரங்களில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது போக்குவரத்து நெரிசல். 15 நிமிடங்களில் ஒரு இடத்தை அடைய வேண்டும் என்றால் நாம் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கிளம்ப வேண்டும். அந்தளவிற்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இதுபோன்ற பிரச்சனை ஒன்றில் தான் சிக்கிக்கொண்டார் மெர்சிடிஸ் இந்தியாவின் சிஇஓ மார்டின் ஷ்வெங்க்.

தன்னுடைய அலுவலகப் பணிக்காக அவசரமாக சென்று கொண்டிருந்த நிலையில், புனேவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக மார்ட்டின் தான் பயணித்த சொகுசு காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடத்துச்சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார்.

இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டா பக்கத்தில், “ உங்களது எஸ்- கிளாஸ் வாகனம் புனே சாலை நெரிசலில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? காரில் இருந்து இறங்கி சில கி.மீ துாரம் நடந்து ரிக்ஷாவைப் பிடிக்கலாமா? என்பது தன்னுடைய அனுபவத்தைப் புகைப்படத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளதோடு பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by Martin Schwenk (@martins_masala)குறிப்பாக பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் இந்தியா சிஇஓக்கே இந்த நிலைமையா? என்றும் இவருக்கு அவசரத்தில் உதவியது நம்முடைய ஆட்டோ தான் என்றும் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். மேலும் இந்தியாவின் இந்த நிலைமையைக் கவனத்தில் கொண்டு, மக்களுக்குத் தேவையான சிறிய மற்றும் மலிவு விலையில் புதிய கார்களை வடிவமைக்கலாமே? என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இதோடு அவசர காலத்தில் நீங்கள் எடுத்த முடிவு உண்மையில் பாராட்டுதலுக்குரியது என்றும் இன்ஸ்டாவில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read : இந்தியாவில் இந்த ஆண்டு இயற்கை பேரழிவு ஏற்படும் - வாங்கா பாபாவின் எச்சரிக்கை.!

யாராக இருந்தாலும் அனைத்துக் காலக்கட்டத்திற்கும் ஏற்றவாறு உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக வலம் வருகிறார் மார்டின் ஷ்வெங்க். 2006 ஆம் ஆண்டு முதல் Mercedes-Benz உடன் தொடர்புடைய மார்ட்டின் ஸ்வென்க், 2018 இல் Mercedes-Benz இந்தியாவின் CEO ஆவதற்கு முன்பு சீனாவில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Mercedes benz, Photo, Pune, Trending