மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கக் கூடிய வலிகள் அளவிட முடியாதது. ஆணுக்கு நிகராக விண்வெளி வரை பெண்கள் சென்று வந்தாலும் கூட சானிட்டரி பேட்டை பேப்பரில் சுற்றி தான் வாங்கி வர வேண்டியுள்ளது. ஏனெனில் அந்த அளவுக்கு சானிட்டரி பேட்கள், மாதவிடாய் கால பெண்கள் ஆரோக்கியமற்றவர்களாக கருதப்படுகிறார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்களை தீட்டு என ஒதுக்கி வைக்கும் பழக்கம் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இன்றளவும் உள்ளது.
இந்த அவலங்களுக்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில் கேரளாவில் புதுமையான பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கொச்சி இந்திய மருத்துவ சங்கம், முத்தூட் குழுமம் மற்றும் எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான கப் ஆஃப் லைஃப் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் ஆண்களை மாதவிடாய் கால வலியால் துடிக்க வைத்துள்ளது.
பெண்கள் தங்கள் வாழ்நாளில் 28-30 நாட்களுக்கு ஒருமுறை அனுபவிக்கும் சராசரியான மாதவிடாய் வலியை ஆண்களை உணர வைத்து வருகிறது. மாலில் நடத்தப்பட்ட ஆய்வில் பீரியட் பெயின் சிடிமுலேட்டர்களை பயன்படுத்தி ஆண்களுக்கு அதே வலி மற்றும் அவஸ்தையை உணர வைத்துள்ளது.
Read More : செய்தி வாசிப்பாளர் வாய்க்குள் புகுந்த ஈ... நேரலையில் நடந்த வைரல் சம்பவம்!
இந்த பரிசோதனையின் ஒரு பகுதியாக கேரளாவில் உள்ள கல்லூரிகளிலும் பீரியட் பெயின் சிமுலேட்டர்கள் மூலமாக மாணவர்களுக்கு பீரியட்ஸ் வலி என்றால் என்ன?, பெண்கள் மாதவிடாய் காலத்தில் என்னென்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிய வைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சோசியல் மீடியா இன்ப்ளூயன்சரான ஷரன் நாயர் என்பவர் கூறுகையில் “இது மிகவும் வேதனையானது. இனி ஒருபோதும் நான் அதை அனுபவிக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளர். கல்லூரி மாணவர்கள் பலரும் சிமுலேட்டர் இயக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வலி தாங்காமல் அலற ஆரம்பித்துள்ளார். சிமுலேட்டரை உடனே நிறுத்தும் படியும் கத்தி கலாட்டா செய்யும் அளவுக்கு வலியை அனுபவித்த அவர்கள், ஒவ்வொரு மாதமும் பெண்கள் இவ்வளவு கொடுமையான வலியை தாங்கிக்கொள்கிறார்களா? என்பதை எண்ணி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
View this post on Instagram
ஐஎம்ஏவின் உள்ளூர் பிரிவு இணைச் செயலாளரும், கப் ஆஃப் லைஃப் பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் அகில் மானுவல் கூறுகையில் “மாதவிடாய் பற்றி மக்கள் அதிகம் பேச வேண்டும். இது பெண்களின் மாதாந்திர பிரச்சனை என்று முத்திரை குத்தி புறந்தள்ளுவதற்கு பதிலாக, சக உயிர் சந்திக்கும் உயிரியல் பிரச்சனையாக பார்க்க வேண்டும். அப்போது தான் மாதவிடாயை வெறும் பெண்கள் பிரச்சனை என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகும் மனப்பான்மை குறையும். அதற்கான உந்துதலாக தான் இந்த பீரியட்ஸ் பெயின் சிமுலெட்டர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிகழ்வுகள் சமீப காலமாக பிரபலமடைந்து வருகின்றன. மாதவிடாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள விழிப்புணர்வு ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் சில நிறுவனங்களுடன் கப் ஆஃப் லைஃப் இணைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமும் இதேபோன்ற பரிசோதனையை மேற்கொண்டது, சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றது.
கேரளாவின் கும்பலங்கி கிராமத்தில் பெண்களுக்கு மென்சுரல் கப் வழங்கும் முயற்சியை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹிபி ஈடன் தொடங்கிவைத்துள்ளார். இந்த ஆண்டு, இந்தியாவின் முதல் சானிட்டரி பேட் இல்லாத கிராமமாக இந்த கிராமத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. கப் ஆஃப் லைஃப் பிரச்சாரம் 1,00,000 மென்சுரல் கப்களை விநியோகிக்கும் நோக்கத்துடன் 4 மாதங்களுக்கு நடத்தப்பட உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Periods, Trending Video, Viral Video