சோப்பு போட்டு குளித்தவாறே டூவீலரில் பயணம்... ஆப்பு வைத்த போலீஸ்..!

சோப்பு போட்டு குளித்தவாறே டூவீலரில் பயணம்... ஆப்பு வைத்த போலீஸ்..!
டூவீலரில் சோப்பு போட்டு குளித்த இளைஞர்கள்
  • News18
  • Last Updated: January 27, 2020, 2:19 PM IST
  • Share this:
டூவீலரில் செல்லும் போது சோப்பு போட்டு குளித்து கொண்டு சென்ற இரண்டு இளைஞர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

வியட்நாமை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கேலியாக வீடியோ எடுக்க முடிவு செய்து டூவீலரில் பயணம் செய்யும் போது சோப்பு போட்டு குளித்த செயல் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலாடை அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்கள், ஒரு வாலி முழுமையும் நீரை நிரப்பி, சோப்பு பயன்படுத்தி குளித்து கொண்டவாறே மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.


இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது வேகமாக ட்ரெண்டாகியுள்ளது. இதனிடையே வண்டியில் உள்ள நம்பர் பிளேட் வைத்து வியட்னாம் நகர காவல் துறையினர் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார்.

விசாரணையில் இருவரும் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியது , ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியது, இன்ஸ்சுரன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியது , சைடு மிரர் இல்லாமல் வண்டி ஓட்டியது தெரியவந்தது. அனைத்திற்கும் அபராதம் விதித்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

விளையாட்டு விபரீதம் ஆகும் என்பார்கள். விளையாட்டாய் இளைஞர்கள் செய்த காரியம் அவர்களுக்கே விபரீதமாய் முடியும் என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள்.

இதே போன்று கடந்த ஆண்டு பைக்கில் குடும்பத்தோடு வீட்டை காலி செய்து வீட்டில் உள்ள செல்ல பிராணி உட்பட அனைவரும் பயணித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading