• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பழைய ஏடிஎம் இயந்திரத்தை வாங்கியவருக்கு பம்பர் பரிசு - ஓபன் செய்த போது இன்ப அதிர்ச்சி

பழைய ஏடிஎம் இயந்திரத்தை வாங்கியவருக்கு பம்பர் பரிசு - ஓபன் செய்த போது இன்ப அதிர்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

300 டாலர் கொடுத்து பழைய ஏ.டிஎம்-ஐ வாங்கியவருக்கு ஒன்றை லட்சம் ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

  • Share this:
    அதிர்ஷ்டம் நமக்கு அடிக்காத வரை அதன் மீது பெரிதாக ஈர்ப்பு ஒன்றும் இருக்காது. ஆனால், ஒருமுறை அடிக்கும்போது நம்மால் அதனை நம்பவே முடியாது. அப்படியான ஒரு நிகழ்வு அண்மையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. பழைய எந்திரங்களை வாங்கி, அதனை உடைத்து விற்பனை செய்யும் ஒருவர், பழைய ஏ.டி.எம் ஒன்றை 300 டாலருக்கு வாங்கியுள்ளார். அதனை உடைக்கும்போது பழைய ஏ.டி.எம்மில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை.

    இந்திய ரூபாயில் 22 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் மூலம் ஒன்றை லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்றால், அதனை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?. இந்த வீடியோ கேப்டன் சாஹில் என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பழைய ஏ.டி.எம்மை கொண்டு வந்து உடைக்க தொடங்குகின்றனர். அந்த ஏ.டி.எம்மின் சாவி தொலைந்துவிட்டதால், அதனை பழைய உரிமையாளர் விறபனை செய்துள்ளார்.

    பணம் ஏதும் இருக்காது என்ற எண்ணத்தில் அவர் விற்பனை செய்துள்ளார். இதனை வாங்கிய அவர்கள் வழக்கம்போல் சுத்தி, உளி ஆகியவற்றைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கின்றனர். அப்போது, ஏ.டி.எம் மெஷினுக்குள் பணம் இருப்பதைக் கண்ட அவர்களால், ஆச்சர்யத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், கவனமாக மெஷினை உடைக்கின்றனர்.



    சுமார் 20.16 நிமிடங்கள் அந்த வீடியோ இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அனைத்து கருவிகளையும் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கின்றனர். முழுமையாக உடைத்தபிறகு அதில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்கும்போது, அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம். ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்ற அவர்கள், அந்தப் பணத்தை மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

    Also Read : ரூ.50-க்கு வாடகை காக்கா... அமாவாசை பிசினஸ் ஆஹா!

     

    அவர்களுக்கும் மட்டுமல்லாமல் வீடியோ பார்த்த அனைவருக்கும், வியப்பு ஏற்பட்டுள்ளது. யூடியூப்பில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இதுவரை சுமார் 4 ஆயிரம் பார்வைகளை கடந்துள்ளது. பார்த்தவர்கள், இந்த வீடியோவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். கமெண்ட் பாக்ஸில் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், இது உண்மையா? இல்லை செட்டிங்கா என வினவியுள்ளனர்.

    இதுபோன்ற ஒரு அதிர்ஷ்டம் தங்களுக்கு அடிக்கவில்லையே என்ற ஆதங்கத்தையும் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், யூடியூப் வியூஸ்க்காக, உண்மையாக இருப்பதுபோல் இப்படி தயாரித்திருக்கிறார்கள் என கூற, அந்த சேனலின் சப்ஸ்கிரைபர்களாக இருப்பவர்கள் வீடியோ குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை. மேலும், இது உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: