இது ஒரு நிர்வாண காடு... இங்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி

பப்புவா காடு

இந்தோனேசியாவில் உள்ள பப்புவா காடு புனிதமாக கருதப்படுகிறது. பெண்களுக்கு இந்த காட்டில் முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது.

  • Share this:
    பெண்கள் அதிகாரம் குறித்து உலகளவில் விவதாங்கள் நடைபெற்று வருகிறது. பெண்கள் மீதான அடக்குமுறை, பாலியல் துன்புறத்தல் உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பல தடைகளை மீறி பெண்கள் எல்லா துறைகளில் வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால் ஒரு பெண்ணுக்கு எல்லா வகையிலும் சுதந்திரம் கிடைக்கிறதா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    பெரும்பாலும் பெண்கள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கும் முன்பும் தந்தை அல்லது கணவரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் இந்தோனிசியாவில் பெண்களின் பெருமையை போற்றுவதற்கு ஒரு புனித காடு உள்ளது. இந்த காட்டில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்கள் இந்த காட்டில் தடை செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தோனேசியாவில் உள்ள பப்புவா காடு புனிதமாக கருதப்படுகிறது. பெண்களுக்கு இந்த காட்டில் முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது. எனவே பெண்கள் இங்கு சுதந்திரமாக சுற்றி திரியலாம். ஆண்கள் மட்டும் இந்த காட்டில் நுழைவதில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறினால் ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

    Also Read : மாமியார் வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளின் அதிர்ச்சியூட்டும் செயல் - வைரல் வீடியோ

    பப்புவா காடு சதுப்புநில காடு என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டு காலமாக இந்த காட்டில் நுழையும் பெண்கள் ஆடை அணிவதில்லை. இது பல தலைமுறைகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியம்.

    ஆண்கள் இந்த காட்டில் நுழைந்தால் அவர்கள் அபாரதத்துடன் தண்டனையும் அனுபவிக்க நேரிடும். இந்த காட்டின் புனித தன்மை காரணமாக விதிமீறும் ஆண்களுக்கு சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    Also Read :  அனுஷ்கா ஷர்மாவின் Bodygaurd சம்பளம் பற்றி நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

    ஆண்டிரானா மெராட்ஸி என்ற பெண் பப்புவா காடு குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், பெண்கள் இந்த காட்டில் ஆடை அணியாமல் வனப்பகுதியில் பயணிப்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இங்கு வசிக்கும் பெண்கள் சிறப்பு வகையான கடல் ஓடுகளை சேகரித்து விற்பனை செய்கிறார்கள். நகர மக்களால் இந்த காடு அழிக்கப்பட்டு வருகிறது. காற்று மாசும் அதிகரித்து வருகிறது. பப்புவா வனத்தின் விசித்திரமான பாரம்பரியத்தால் வனம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: