Home /News /trend /

#Pray_for_Neasamani டிரெண்டானது ஏன்? யார் இந்த நேசமணி?

#Pray_for_Neasamani டிரெண்டானது ஏன்? யார் இந்த நேசமணி?

யார் இந்த நேசமணி

யார் இந்த நேசமணி

2000-ம் ஆண்டு வந்த இந்தக் காட்சி இப்போது வைரலாவதைப் பார்க்கும்போது ஃப்ரெண்ட்ஸ் பட காமெடிக்கும், வடிவேலுக்கும் எண்டுகார்டே கிடையாது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

  • News18
  • Last Updated :
காண்டிராக்டர் நேசமணிக்காக பிரார்த்தியுங்கள் இதுதான் நேற்று உலகம் முழுக்க டிரெண்டானது.

2000-ம் ஆண்டில் வெளிவந்த ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சிக்கு சிரிக்காமல் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது. நம்ம பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியும், அவரது லேபர்ஸ்-ம் அள்ளித்தெளித்த நகைச்சுவை காட்சிகளை நம்மால் மறக்கவே முடியாது.

காமெடியில் அசத்திய பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி வாய மூடுறா குரங்கு, சள்ளி சள்ளியா நொறுக்கிட்டீங்களேடா, நீ புடுங்கரதெல்லாமே தேவையில்லாத ஆணிதான் என அடுக்கடுக்கான கான்ட்ராக்டர் நேசமணியின் வசனங்களை கவுண்டர் அடிக்காத ஆட்களும் தமிழகத்தில் இருக்க முடியாது.

19 ஆண்டுகள் கழித்து ட்ரெண்டான நகைச்சுவை காட்சி

பிரெண்ட்ஸ் படத்தின் நகைச்சுவை காட்சி 19 ஆண்டுகள் கழித்து Pray_for_Neasamani என்னும் ஹேஷ்டேக் மூலம் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை வடிவேலு பாணியில் ஆழமாக போயி அலசி பார்க்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் `Civil Engineering Learners' என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்க, விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்த சுத்தியல்தான் பதம் பார்த்தது என கோக்குமாக்காக கமெண்ட் இட, Pray_for_Neasamani ஹேஷ்டேக் உருவானது.

முகநூலில் இடம் பெற்ற முதல் நேசமணியின் பதிவு


 

இது போதுமே 'விடுவோம்மா நாங்க' என்பது போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் கோதாவில் இறங்கி, பிரேக்கிங் நியூஸ், டெம்ப்ளேட் வீடியோ என பலவிதமாக மீம்ஸ்களை வெளியிட தொடங்கினர். இதையடுத்து பேஸ்புக்கில் வைரலான நேசமணி தற்போது ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டாகி 'ஓவர் நைட்டில் ஒபாமா' ஆகிவிட்டார்.

தற்போது நேசமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 இட்லி மற்றும் கலக்கி சாப்பிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சான்றிதழ் அளித்தது போல் படுஜோரான மீம்ஸை வலைதளவாசிகள் பறக்க விட்டனர்.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டது போல மீம்ஸ் கிரியேடர்ஸ் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி


ஸ்டாலினையும் விட்டுவைக்காத மீம்ஸ் கிரியேட்டர்கள்

அரசியலில் குதித்த மீம்ஸ் கிரியேட்டர்கள், நேசமணி நிலைக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது போலவும், நேசமணியை பார்க்க பிரதமர் மோடி நேரில் வந்ததாகவும் ட்விட் செய்தனர். பலரையும் ரசிக்க வைத்த இந்த மீம்ஸூக்கு 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' என்ற வசனமே கமெண்டாக அமைந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தமிழகம் விரைந்தார்.


நேசமணியின் தலையில் சுத்தியலை விட்டெறிந்த கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்த வடிவேலுவின் விழுதுகள், apprenticeship என சொல்லி சம்பளம் தரமால் வேலை வாங்கியதால் சுத்தியலை தலையில் போட்டதாக கூறி பஞ்சாயத்தையும் முடித்து வைத்தனர்.

ட்ரெண்டாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா

எல்லாவற்றிற்கும் மேலாக 'ட்ரெண்டாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா' என கேட்கும் அளவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தமிழகம் விரைந்ததாகவும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேசமணிக்காக பழனியில் பால்காவடி எடுப்பதாகவும் கூறியபடி புகைப்படங்களை வெளியிட்டு டார்ச்சர் படுத்தினர்.

சமூக வலைதளங்களையும், நெட்டிசன்களையும் புரிந்துகொள்ளவே முடியாது. எப்போது எது ட்ரெண்ட் ஆகும், யார் சர்ச்சையில் மாட்டுவார் என எதையுமே கணிக்கமுடியாது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்று மட்டும் நிச்சயம் சொல்லலாம். `நீ இன்னைக்கு வேணும்னா ட்ரெண்டிங்ல இருக்கலாம், அவர் எப்போவுமே ட்ரெண்டிங்தான்டா' என்று கூறும் அளவுக்கு வடிவேலு முகத்தைப் பார்க்காமல் உங்களால் சமூக வலைதளங்களைக் கடந்துவந்துவிடமுடியாது.

மீம் கிரியேட்டர்களுக்குப் பஞ்சம் வரும்போதெல்லாம் வடிவேலுவின் பழைய காமெடிக் காட்சிகளைத்தான் தூசுதட்டுவர். அப்படித் தேர்தல் முடிந்து கொஞ்சம் வறட்சியில் இருந்த நெட்டிசன்களுக்குக் கிடைத்த பம்பர் பரிசுதான் இந்த #Pray_for_Neasamani ஹேஷ்டேக்.

 Also see... அமைச்சரவை வெளியாவதற்கு முன்பே அமைச்சரான ஓபி நவீந்திரநாத்

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published:

Tags: Cinema, Comedy king vadivelu, Social media

அடுத்த செய்தி