ரஸ்னா பவுடரை கஞ்சா என விற்ற கும்பலை பிடித்த போலீஸ்.. வைரலாகப் பரவும் புகைப்படம்..!

ஷில்லாங்கைச் சேர்ந்த கஞ்சா விற்கும் கும்பல் என சோதனையில் கண்டுபிடிப்பு.

news18
Updated: August 16, 2019, 4:45 PM IST
ரஸ்னா பவுடரை கஞ்சா என விற்ற கும்பலை பிடித்த போலீஸ்.. வைரலாகப் பரவும் புகைப்படம்..!
ரஸ்னா பவுடர்
news18
Updated: August 16, 2019, 4:45 PM IST
போலீஸ் எத்தனை பிரச்னைகளைதான் சமாளிக்க முடியும்..முடியலடா..போதும்.. என்று கதறி புலம்ப வைத்துவிட்டது இந்த கஞ்சா கும்பல்.

புதுசு புதுசாக.. தினுசு தினுசாக குற்றங்களைக் கண்டறிந்த போலீஸுக்கு இது மிகவும் விசித்திரமானதாக இருந்துள்ளது. மேகலயாவில் உள்ள காவல்துறைக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் இருக்கும் இடம் பற்றி துப்பு கிடைத்துள்ளது. அவர்களும் இருக்கும் படைகளை திரட்டிக்கொண்டு கும்பலைப் பிடிக்க விரைந்துள்ளனர்.

இறுதியாக அந்த கும்பலைப் பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் ஷில்லாங்கைச் சேர்ந்த கஞ்சா விற்கும் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் விற்றுக் கொண்டிருப்பது கஞ்சா இல்லை 'ரஸ்னா பவுடர்' என்பதும் தெரிய வந்துள்ளது.
இதை மேகலயா போலீஸே தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். அதில் ”ஷில்லாங் மார்க்கெட் வறட்சியை இதனால் புரிந்துகொள்ள முடிகிறது. கஞ்சா விற்பனையாளர்கள் ரஸ்னா பவுடரை கஞ்சா என ஏமாற்றிக்கொண்டு வருகின்றனர்.. ஒருவேலை உங்களைத் தேடி ரஸ்னா பவுடர் வந்தால் எங்கு புகார் அளிக்க வேண்டும் என்பது தெரியும் என நினைக்கிறோம்..! ” இவ்வாறு ட்விட்டரில் ரஸ்னா பவுடர் புகைப்படத்தோடு ஷேர் செய்துள்ளனர். இந்த ட்வீட் நெட்டிசன்களால் கவரப்பட்டு மீம்ஸ் , கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.இதேபோல் அஸ்ஸாமில் கிடைத்த 590 கிலோ கஞ்சா பிடிபட்டதையும் ட்விட்டரில் ஷேர் செய்தது ட்ரெண்டானது.அதில் அவர்கள் ”உங்களுடைய 590 கிலோ கஞ்சா பொட்டலங்கள் தொலைந்திருந்தால் கவலை வேண்டாம். எங்களிடம்தான் உள்ளது. எங்களிடம் வந்தா உதவுகிறோம்” என ட்வீட் செய்து அனைவரின் மனதையும் கவர்ந்தனர். அதன் பிறகு தற்போது இந்த மேகலயா காவலர்கள் பிரபலமடைந்துள்ளனர்.
First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...