ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உலகிலேயே மிக சிறிய முயல் இனம்..! உள்ளங்கை அளவு தானாம்..!

உலகிலேயே மிக சிறிய முயல் இனம்..! உள்ளங்கை அளவு தானாம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உலகிலேயே வெறும் 14 பிக்மி இன முயல்கள் மட்டும் தான் மீதம் இருந்த நிலையில் வனவிலங்கு பூங்காக்கள் அவற்றை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்கிக் கொண்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகில் உள்ள பல்வேறு மக்களுக்கு வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது பிடிக்கும். சிலருக்கு நாய் பூனை ஆகியவை மட்டும் போதும் என நிறுத்தி விட, சிலரோ வீடுகளில் ஆடு, மாடு, முயல் என்று பல்வேறு வித விலங்குகளையும் வளர்த்து வருவார்கள். அவற்றில் முயலினம் மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஆனால் முயல் இனம் ஒன்று உங்கள் உள்ளங்கையில் அடங்கும் அளவிற்கு சிறிய அளவில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் உண்மை தான்..

பிக்மி என பெயரிடப்பட்ட அந்த முயலினமானது உலகின் மிகச் சிறிய முயலினமாகும். அதன் அதிகபட்ச வளர்ச்சியே 20 சென்டிமீட்டரில் இருந்து 50 சென்டிமீட்டர் வரை தான் இருக்கும். மேலும் அதன் எடையானது 400 கிராம்-லிருந்து 2 கிலோகிராம் வரை இருக்கும். பூமியில் உள்ள அரிய வகை இனங்களில் இந்த பிக்மீ முயலினமும் ஒன்று.

இந்தப் முயல்கள் பழுப்பு, கிரே மற்றும் பாஃப் நிறங்களில் காணப்படுகின்றன. அதிலும் இந்த முயல் இனங்கள் குறிப்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் மட்டும்தான் காண முடியும். மேலும் அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இந்த முயல் இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வனவிலங்கு பூங்காக்களின் முயற்சியினால் அவை மீண்டும் வளர துவங்கியுள்ளன. உலகிலேயே வெறும் 14 பிக்மி இன முயல்கள் மட்டும் தான் மீதம் இருந்த நிலையில் வனவிலங்கு பூங்காக்கள் அவற்றை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்கிக் கொண்டு வருகின்றன.

இவை வாசனைத் திறன் மூலம் செய்திகளை அறிகின்றன. சிறுநீர் கழிப்பதன் மூலம் இவை தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளுகின்றன. தாவரங்கள்தான் இவற்றின் முக்கிய உணவு ஆகும். இவை ஆரோக்கியமாக இயங்குவதற்கு மிக அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்த தாவரங்கள் தேவைப்படுகிறது. மேலும் இவற்றின் செரிமான மண்டலம் ஆனது பெரிதாக உள்ளது. இவற்றிற்கு நன்கு வளர்ச்சி அடைந்த சுரப்பிகள் உள்ளன. அதனை நிலையான பொருட்களின் மீது உரசுவதின் மூலம் தங்களது இனம், பால், வயது மற்றும் தங்கள் எல்லை ஆகியவற்றை இவை மற்ற இனத்திற்கு தெரிவிக்கின்றன.

ஒருவேளை ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மரத்து போனது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அப்படியே அசையாமல் இருந்து விடும். எங்கேயும் சென்று ஒளிந்து கொண்டு நீண்ட நேரத்திற்கு அப்படியே அசையாமல் இருக்கும். இதுவே அவை ஏதேனும் விலங்குகளால் அல்லது ஆபத்து அவர்களை துரத்துவது போல் உணர்ந்தால் மிக வேகமாக ஓடிவிடும். இவை தனது வேகத்தை பயன்படுத்தி ஓடுவதை விட தன்னை துரத்தும் விலங்குகளை குழப்புவதற்காக குறுக்கும் நெடுக்குமாக ஓடி அவற்றை குழப்பத்திற்கு ஆளாக்கி அதன் மூலம் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்கின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த முயலை நீங்கள் வீட்டில் வைத்து வளர்க்க முடியாது.

மேலும் இவை அழிந்து வரும் நிலையில் உள்ள விலங்கினம் என்பதால் வீடுகளில் வைத்து வளர்ப்பதற்கு பதிலாக வனவிலங்கு பூங்காக்களின் மூலம் தான் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

First published:

Tags: Trending, Viral