• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • புறாக்களுக்காக மாதம் ரூ.12,000 செலவு செய்யும் 3 சகோதரர்கள்

புறாக்களுக்காக மாதம் ரூ.12,000 செலவு செய்யும் 3 சகோதரர்கள்

புறாக்கள்

புறாக்கள்

ஒடிசாவில் 3 சகோதரர்கள் சேர்ந்து சுமார் 250 புறாக்களை வளர்த்து வருகின்றனர். அதற்காக மாதந்தோறும்12,000 ரூபாய் செலவு செய்கிறார்கள்.

  • Share this:
    வீட்டில் எப்போதும் கலகலப்பான சூழல் இருக்க வேண்டும் என்றால் செல்லப் பிராணிகளை வளர்த்தால் போதும். தனியாக வீட்டில் வசிப்போருக்கு செல்லப் பிராணிகள் தான் சிறந்த துணை. அவற்றுடன் எப்போதும் மணி கணக்கில் நேரம் செலுத்துவார்கள். மனநிம்மதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் பேசினால், அவர் கூறும் ஆலோசனைகளில் ஒன்று செல்லப் பிராணிகளை வளர்த்தல் தான். இப்படி பல வகையில் மனிதர்களுக்கு நிவாரணமாக இவை இருந்து வருகின்றன.

    இன்றைய இளம் தலைமுறையினருக்கு செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம் கூடுதலாக உள்ளது என்றே சொல்லலாம். நாய், பூனை, கோழி, புறா, முயல், கிளி போன்ற வீட்டு விலங்குகள் முதல் பாம்பு, சிலந்தி, புலி, முள்ளம்பன்றி, நரி போன்ற பயங்கரமான காட்டு விலங்குகள் வரை செல்லப் பிராணிகளாக பலர் வளர்த்து வருகின்றனர். இதற்காக ஆயிரம் முதல் லட்சம் வரை செலவு செய்வோரும் உண்டு.

    இப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று தான் ஒடிசா மாநிலத்தில் நடந்து வருகிறது. 3 சகோதரர்கள் சேர்ந்து சுமார் 250 புறாக்களை வளர்த்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 வரை செலவு செய்கின்றனர். இந்த செய்தியை வாசிக்கும் பலருக்கு இது ஆச்சரியத்துடன் கூடிய அதிர்ச்சியை நிச்சயம் உண்டாக்கும்.

    மகேஷ், சங்கர் மற்றும் ஜித்தேந்திரா சாஹு ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ள தெங்கனல் பகுதியில் வசித்து வருகின்றனர். புறாக்களின் மீதுள்ள அதீத பிரியத்தால் இவற்றை வளர்க்க தொடங்கினர். இவர்களிடம் 15 வகையான வெவ்வேறு இன புறாக்கள் உள்ளதாம். மொத்தம் 250 புறாக்களை இவர்கள் வளர்த்து வருகிறார்கள். இந்த புறாக்கள் தான் இவர்களின் மிக நெருக்கமான செல்லப் பிராணிகள்.

    இவற்றை மும்மை, சட்டிஸ்கர் மற்றும் வேறு சில இடங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கின்றனர். ஆரம்பத்தில் இந்த புறாக்களை வளர்க்க இவர்களின் வீட்டில் கடும் எதிர்ப்பு வந்ததாக 3 சகோதரர்களில் ஒருவரான சங்கர் கூறுகிறார். பிறகு சில காலம் கடந்த பின், குடும்பத்தில் உள்ள அனைவரும் புறாக்களை நேசிக்க தொடங்கி விட்டனர். மேலும் அவர்கள் புறாக்களை வளர்க்க தங்களுக்கு உதவி செய்து வருவதாக குறிப்பிடுகிறார்.

    புறாக்களுக்காக மாதம் ரூ.12,000 செலவு செய்வதற்கு, இவர்கள் நடத்தி வரும் டிபன் கடை உதவுகிறதாம். 1998 ஆம் ஆண்டில் இருந்தே இவர்கள் மூவரில் ஒருவரான மகேஷ் என்பவர் பறவைகளை வளர்த்து வருகிறார். இவர்கள் மூவருக்கும் பறவைகள் என்றால் அவ்வளவு பிரியம் என இவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

    தினமும் காலை உணவை சாப்பிட்ட பிறகு, புறாக்கள் அனைத்தும் விண்ணை நோக்கி பறக்க சென்று விடும். மகேஷ் எழுப்பும் ஸ்பெஷலான ஒலியை கேட்ட பின்பே இவைகள் மீண்டும் கீழே இறங்கும். அந்த அளவிற்கு எல்லா புறாக்களுடனும் இவர்கள் மூவரும் அன்புகாட்டி வளர்த்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: