படிப்புக்காக ஃபுட் டெலிவரி செய்யும் இளம்பெண்… உதவிக்கரம் நீட்டிய யூடியூபர்!

குடும்பத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தனது படிப்பு கட்டணங்களுக்கான செலவுகளை பூர்த்தி செய்வதற்கும் சக்கரம் போல் சுழன்று வருகிறார் ரச்சனா.

குடும்பத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தனது படிப்பு கட்டணங்களுக்கான செலவுகளை பூர்த்தி செய்வதற்கும் சக்கரம் போல் சுழன்று வருகிறார் ரச்சனா.

  • Share this:
கடினமாக உழைத்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளார், ஹைதராபாத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் இப்பெண்ணின் ‘நிஜ கதை’ அமைந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவில் உள்ள பாலசமுத்திரத்தில் வசிக்கும் ரச்சனா தனது படிப்பு செலவிற்கும், கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு உதவுவதற்காகவும் ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வரும் ரச்சனா, பகல் நேரங்களில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். பின்னர், மற்ற நேரத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி தளமான சொமாட்டோவில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார். குடும்பத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தனது படிப்பு கட்டணங்களுக்கான செலவுகளை பூர்த்தி செய்வதற்கும் சக்கரம் போல் சுழன்று வருகிறார் ரச்சனா. பட்டம் முடித்த பிறகு தனக்கு வேலை கிடைப்பதிலும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரச்சனா கூறுகையில், ‘நான் எனது பெற்றோருக்கு என்னால் முடிந்த அளவிற்கு பணம் அனுப்புகிறேன், மீதம் வரும் பணத்தை எனது படிப்பு செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு பயன்படுத்துகிறேன். இந்த வேலை என்னை என் வாழ்வில் தக்கவைக்க உதவுகிறது’ என கூறியுள்ளார். ரச்சனாவுக்கு இது முதல் பணி அல்ல. தனது வாழ்வாதாரத்திற்காக முன்னர் பல வேலைகளை செய்துள்ளார். பால் கடை ஒன்றிலும், மளிகை கடையிலும் பணி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறும்போது ‘நான் ஒரு பால் கடையில் வேலை செய்தேன், ஆனால் அதில் வந்த வருமானம் எனது படிப்பையும், பெற்றோரையும் சமமாக கையாள போதுமானதாக இல்லை. நான் இந்த டெலிவரி பணியை ஒரு மாதமாக செய்து வருகிறேன், இதில் வரும் வருமானம் எனது தேவைகளுக்கு போதுமானதாக உள்ளது. நான் தற்போது பயின்று வரும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸை முடிந்த பிறகு , என் கையில் ஒரு வேலை இருக்கும், அதுவரை நான் என் பணியை தொடருவேன்’ என்றார் ரச்சனா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே, தெலங்கானாவில் பிரபல யூடியூபர்களில் ஒருவரான சீதாபல்மண்டியைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர், ரச்சனாவுக்கு பத்தாயிரம் ரூபாய் பண உதவியும், தனது சொமாட்டோ வேலைக்காக ஒரு இரு சக்கர வாகனத்தையும் வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Archana R
First published: