முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / எங்கும் வித்தியாசம், எதிலும் வித்தியாசம்... நாவினால் ஓவியம் தீட்டும் இளைஞர்... யார் இந்த சுர்லா வினோத்!

எங்கும் வித்தியாசம், எதிலும் வித்தியாசம்... நாவினால் ஓவியம் தீட்டும் இளைஞர்... யார் இந்த சுர்லா வினோத்!

நாவினால் ஓவியம் தீட்டும் இளைஞர்... யார் இந்த சுர்லா வினோத்!

நாவினால் ஓவியம் தீட்டும் இளைஞர்... யார் இந்த சுர்லா வினோத்!

வெள்ளை நிற கேன்வாஸை தனது நாவினால் வண்ணமயமான ஓவியமாக மாற்றும் 18 வயது இளம் கலைஞர் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார்.

  • Last Updated :

கலைத்துறையில் சாதிக்க துடிக்கும் ஏராளமான இளைஞர்களில் சிலர் மட்டுமே தனது தனித்திறமையால் ஊடக வெளிச்சம் பெறுகின்றனர். வழக்கமான வழியில் இல்லாமல் எதையும் மாத்தி யோசிக்கும் நபர்களுக்கு மட்டுமே வெற்றி கிட்டும். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறியுள்ளார். ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள பாலிகாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயதான சுர்லா வினோத்.

இவர் தனது நாவினையே வர்ண தூரிகையாக மாற்றி சுவர், கேன்வாஸ், காகிதம் என அனைத்திலும் விதவிதமான ஓவியங்களை வரைத்து வருகிறார். இவரது இந்த தனித்துவமான திறமைக்கு பரிசாக பல விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்து வருகிறார். மேலும் சுர்லா வினோத் நாவை பயன்படுத்தி ஓவியம் வரையும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக யூ-டியூப்பில் அதிக லைக், கமெண்ட், ஷேர்களை பெற்று வருகிறது.

பள்ளி நாட்களில் இருந்தே சுர்லா வினோத்திற்கு ஓவியத்தின் மீது தீராத காதல் ஏற்பட்டது. சுவர்கள், பாட நோட்டுக்கள் என அனைத்திலும் தத்ரூபமான ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். இது பள்ளி ஆசிரியர்களைக் கடந்து கிராமத்தினர் மற்றும் உறவினர்களிடம் இருந்தும் அவரது ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் மனப்பான்மையை வளர்த்தது. ஆனால் வினோத் தனது வேலையை அவுட் ஆஃப் தி-பாக்ஸ் மனப்பான்மையுடன் செய்ய விரும்பினார்.

Also Read : பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை ரூ.36,000... தள்ளுபடி போக வெறும் ரூ.26,000... ஷாக் கொடுத்த அமேசான்

ஒரு நாள் காலை யூடியூப்பில் ஒரு கலைஞன் தன் நாவால் ஓவியம் வரையும் வீடியோவை சுர்லா வினோத் பார்த்துள்ளார். அந்த கணமே தான் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த பிரஷ்ஷை ஒருபுறம் வைத்துவிட்டு, வினோத் தன் நாவை பயன்படுத்தி ஓவியம் தீட்ட ஆரம்பித்துள்ளார். ஓவியத்தில் இவரது புதிய அணுகுமுறை அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் தொடங்கி, மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் மற்றும் சமீபத்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் திருவுருவப் படங்கள் என ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார்.

இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு ஓவிய போட்டிகளில் பங்கேற்று, தனது நாவினால் வரைந்த ஓவியங்களுக்கு பரிசுகளை வென்று வருகிறார். ஐதராபாத்தில் உள்ள கபில்பட்டினம் ஆர்ட்ஸ் அகாடமி கொரோனா விழிப்புணர்வு குறித்து ஏற்பாடு செய்திருந்த ‘தேசிய குழந்தைகள் கலை வேட்டை’ போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த விஸ்வகுரு வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் தனது படைப்புகளை சமர்ப்பித்த பிறகு 2021ம் ஆண்டிற்கான சுவாமி விவேகானந்தர் ஐகான் விருதையும் வினோத் பெற்றுள்ளார்.

top videos

    இதுகுறித்து சுர்லா வினோத் நியூஸ் 18க்கு அளித்துள்ள பேட்டியில் “உலகெங்கிலும் உள்ள ஆரம்ப கட்ட ஓவியர்களுக்கு தனது ஓவியங்களை காட்ட சோசியல் மீடியா சிறந்த தளமாக அமைந்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற தனது கலைத்திறனை மெருகேற்றி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Trends, Viral