Home /News /trend /

சுமார் 10 வருடங்கள் தாலிபான்களை முட்டாளாக்கிய ஆப்கான் இளம்பெண் - எப்படி, ஏன்?

சுமார் 10 வருடங்கள் தாலிபான்களை முட்டாளாக்கிய ஆப்கான் இளம்பெண் - எப்படி, ஏன்?

நடியா குலாம்

நடியா குலாம்

பல்லாண்டுகளுக்கு பிறகான தாலிபான்கள் ஆட்சி பழைய காயங்களை அம்மக்களுக்கு நினைவுபடுத்தும் அதே வேளையில், சர்வதேச பகழ்பெற்ற நடியா குலாம் (Nadia Ghulam) என்ற ஆப்கான் பெண்மணி தாலிபான்களை சுமார் 10 வருடங்கள் ஏமாற்றிய சுவாரசிய தகவலும் மீண்டும் நினைவு கூறப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
20 ஆண்டுகளுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி உள்ள சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.  20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கான் மீண்டும் இருந்த காலத்திற்கு சென்றுள்ளது பல்வேறு உலக நாட்டு மக்களை கவலை கொள்ள செய்து உள்ளது. தாலிபான்களிடமிருந்து தப்பி பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

முந்தைய தாலிபான் ஆட்சியில் பெண்கள் அனுபவித்த கொடுமைகளும், சித்ரவதைகளும் இன்னும் நினைவில் இருக்கும் காரணத்தால் அங்கிருக்கும் மக்கள் தாலிபான்கள் நல்லாட்சி தருவோம் என்று சொல்வதை நம்பவில்லை. காபூல் விமான நிலையம் தற்போது நாட்டிலிருந்து வெளியேற விரும்பும் பிற நாட்டினருக்கான விமானங்களை இயக்குவதற்காக திறக்கப்பட்டுள்ளதால், கொந்தளிப்பு சூழல் நிலவும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் குடிமக்களை பத்திரமாக வெளியேற்ற நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்லாண்டுகளுக்கு பிறகான தாலிபான்கள் ஆட்சி பழைய காயங்களை அம்மக்களுக்கு நினைவுபடுத்தும் அதே வேளையில், சர்வதேச பகழ்பெற்ற நடியா குலாம் (Nadia Ghulam) என்ற ஆப்கான் பெண்மணி தாலிபான்களை சுமார் 10 வருடங்கள் ஏமாற்றிய சுவாரசிய தகவலும் மீண்டும் நினைவு கூறப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான பிற்போக்கு குணமுடைய தாலிபான்களுக்கு மிகவும் பிடிக்காத ஒன்று பெண் சுதந்திரம். அப்படிப்பட்ட தாலிபான்களை சுமார் 10 ஆண்டுகளாக சிறுவன் போல மாறுவேடமிட்டு ஏமாற்றிய பெருமைக்குரியவர் தான் இந்த Nadia Ghulam.

இவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் கூட, சிறுவனாக மாறுவேடம் பூண்டு பர்தா மற்றும் ஹிஜாப் இல்லாமல் தாலிபான் அமைப்பை ஏமாற்றி நாட்டில் சுதந்திரமாக நடமாடினார். சர்வதேச ஊடகங்களில் புகழ் பெற்றதால் இவரது கதை தைரியம் மற்றும் உயிர்வாழும் கதையாக இருக்கிறது 20 வருடங்களுக்கு முன்னர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சியில் இருந்த நேரத்தில் நடியா குலாம் அந்நாட்டில் வசிக்கும் ஆப்கானிஸ்தானின் குடிமகளாக இருந்தார். தாலிபான் ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கு படிக்கும் அல்லது வேலை செய்யும் உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டது.

Also read... காதலிக்காக பெண் வேடமணிந்து தேர்வு எழுதி மாட்டிய காதலன் - அடுத்து நடந்தது என்ன?

ஆனால் குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நடியா ஒரு பையனை போல மாறுவேடமிட்டு தன் வீட்டை விட்டு வெளியேறினார். நிச்சயம் மிக பெரிய ஆபத்தான செயல் இது. ஏனென்றால் இதை பற்றி தாலிபான்கள் தெரிந்து கொண்டால் நடியா குலாம் கொல்லப்படுவது உறுதியான ஒன்று. நடியா குலாம் தனது 11 வயதிலிருந்தே ஒரு பையனை போலவே உடை அணிய தொடங்கினார். நடியா பல முறை தாலிபான்கள் கண்ணில் சிக்கினாலும் சிறுவனை போல மாறுவேடத்தில் இருந்ததால், ஆபத்தில் சிக்கினாலும் ஒவ்வொரு முறையும் தப்பிக்க முடிந்தது.

ஒரு சிறுவனை போலவே உடை அணிய தொடங்கிய போது தான் ஒரு பெண் என்பதையே அடிக்கடி மறந்துவிட்டதாக கூறி இருக்கிறார். தாலிபான்களை முட்டாளாக்கும் இந்த வேலையை சுமார் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்துள்ளார் நடியா குலாம். பின்னர் ஒரு NGO உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறிய நடியா, தற்போது ஸ்பெயினில் ஆப்கானிஸ்தான் அகதியாக வசித்து வருகிறார். இவர் தனது வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட The Secret of My Turban என்ற புத்தகத்தை, பத்திரிகையாளர் ஆக்னஸ் ரோட்ஜருடன் இணைந்து எழுதியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: News On Instagram, Taliban

அடுத்த செய்தி