ஆறு UGC-NET பாடங்களில் தகுதி பெற்று சாதனை - இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த கான்பூர் ஆசிரியர்!

ஆசிரியர் அமித் குமார் நிரஞ்சன்

இதுவரை நடத்தப்பட்ட UGC-NET தேர்வில் சுமார் ஆறு பாடங்களில் தகுதி பெற்றதற்காக கான்பூரைச் சேர்ந்த ஆசிரியர் அமித் குமார் நிரஞ்சன் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், இளைய ஆராய்ச்சி பெல்லோஷிப்களை வழங்குவதற்கும் தேசிய தகுதித் தேர்வு (NET) நடத்தப்படுகிறது. யுஜிசி நெட் தேர்வு சுமார் 81 பாட பிரிவுகளில் நடத்தப்படுகிறது. அவை பெரும்பாலும் மனிதநேயம் மற்றும் வர்த்தக துறைகளில் இருந்தே வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில் இதுவரை நடத்தப்பட்ட UGC-NET தேர்வில் சுமார் ஆறு பாடங்களில் தகுதி பெற்றதற்காக கான்பூரைச் சேர்ந்த ஆசிரியர் அமித் குமார் நிரஞ்சன் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு பாடத்திலும் அவரது நிபுணத்துவம் அவரது கற்பித்தலின் தரத்தை மேம்படுத்துவதாகவும், இதனால் அவரது மாணவர்களில் கற்றலை மேம்படுத்துவதாகவும் ஆசிரியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஆறு வெவ்வேறு பாடங்களில் UGC-NET தகுதி பெற்ற முதல் இந்தியர் என்று பெருமையையும் அமித்குமார் நிரஞ்சன் பெற்றுள்ளார். இது அவரது அயராத முயற்சிகள் மற்றும் பத்து வருட கடின உழைப்பு ஆகும். இவர் கடந்த ஜூன் 2010ம் ஆண்டு UGC-NET-JRF வர்த்தக பாடப்பிரிவில் தகுதி பெற்றார். இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் UGC-NET பொருளாதார பாடத்தில் தகுதி பெற்றார்.

ஆனால் ஆசிரியரின் லட்சிய பயணம் அதோடு முடிவடையவில்லை. கடந்த 2012 டிசம்பர் மாதம் UGC-NET மேலாண்மை பாடத்தில் தகுதி பெற்றார். தொடர்ந்து டிசம்பர் 2015ம் ஆண்டு கல்வியில், 2019ம் ஆண்டு டிசம்பரில் அரசியல் அறிவியல் மற்றும் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சமூகவியல் என மொத்தம் 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதுதவிர, ஐ.ஐ.டி-கான்பூரில் பொருளாதார பாடப்பிரிவில் PhD முடித்துள்ளார். ஆறு வெவ்வேறு பாடங்களில் யுஜிசி-நெட் தேர்வுகளை எழுதத் தூண்டியது குறித்து நியூஸ் 18 உடன் பேசிய அமித், தற்போது கல்வி என்பது ஒரு சேவையை விட ஒரு வணிகத்தைப் போன்றது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “மாணவர்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினர். அவர்களின் ஆர்வமும் ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து கேள்வி கேட்பதும் எனக்கு ஒருபோதும் முடிவில்லாத உந்துதலாக இருக்கிறது” என்று தெரிவித்தார். 37 வயதாகும் அமித்துக்கு பொருளாதாரம் மற்றும் வணிகம் கற்பிப்பதில் 12 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமித் ஆறு பாடங்களை ஆழமாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு நல்ல ஆசிரியர் இல்லாததால் தானே ஆசிரியராக ஆன அமித், நல்ல வழிகாட்டுதலின் பற்றாக்குறையால் திணறும் ஒரு மாணவனின் வருத்தத்தை தான் புரிந்து கொண்டதாகவும் கூறினார். இதுபோன்ற அனுபவங்களிலிருந்து மாணவர்களை மேலும் தவிர்ப்பதற்காக, இந்திய கல்வி முறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அந்த வகையில் "கற்பித்தல் ஒரு தேர்வாக மாறும், ஆனால் தற்செயலாக அல்ல" என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் அடிப்படை கல்வி முறை ஒரு மாணவரின் தர்க்கங்கள் மற்றும் கருத்துகளின் வலுவான தளத்தை கட்டியெழுப்ப போதுமானதாக உள்ளது என்று அமித் நம்புகிறார். மேலும், IIT, IIM மற்றும் AIIM ஆகியவை இதற்கு மிகப்பெரிய சான்று என தெரிவித்தார்.

Also read... JEE முதல்நிலை தேர்வு 2021 - ஏப்ரல் அமர்வுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

அமித் அனைத்து பாடங்களை எழுந்தியிருந்தாலும், அவற்றில் மிகவும் ஆர்வமாக இருப்பது அறிவியலில் தான். இது குறித்து அவர் கூறியதாவது, "இன்று ஒவ்வொருவரும் ஒரு அரசியல் கருத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அந்தக் கருத்துக்களுக்குப் பின்னால் உள்ள பெரும்பாலான பின்னணி தகவல்கள் சமூக ஊடகங்களிலிருந்து வந்தவை. அவை பெரும்பாலும் சரியானவை அல்லது சீரானவை அல்ல. எனவே, இந்திய அரசியலைப் புரிந்து கொள்ள ஒருவர் நமது ஜனநாயகத்தின் உண்மைகள், அடிப்படை சட்டங்கள், உரிமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும், ”என்று கூறினார்.

மேலும் தனக்கு அரசியலில் பங்கேற்க எந்த திட்டமும் இல்லை. ஆனால் சரியான தகவலும் அறிவும் இருப்பது தனக்கு ஒரு புதையல் என்று அமித் நியூஸ்18 இடம் தெரிவித்தார். இவர்,இந்த முறை நடைபெற்ற யுஜிசி-நெட் உளவியல், தத்துவம் மற்றும் இலக்கியம் போன்ற சில பாடங்களில் தேர்ச்சி பெற வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: