ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பெரிய குடும்பம் வேண்டுமென்ற கனவை நிறைவேற்றிய 113 வயது தாத்தா.. கணக்கை கேட்டால் தலைசுற்றும்

பெரிய குடும்பம் வேண்டுமென்ற கனவை நிறைவேற்றிய 113 வயது தாத்தா.. கணக்கை கேட்டால் தலைசுற்றும்

 Juan Vicente Pérez | 60 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஜுவான் மற்றும் எடியோஃபினா தம்பதியினர் ஆறு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் உட்பட மொத்தம் 11 குழந்தைகளை பெற்றெடுத்தனர். தங்களுக்கு ஒரு பெரிய குடும்பம் வேண்டும் என்ற தங்கள் கனவையும் நிறைவேற்றிக் கொண்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது...

மேலும் படிக்கவும் ...

வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் (Juan Vicente Pérez) என்கிறவர், உலகிலேயே மிகவும் வயதான மனிதர் (ஆண்) என்கிற கின்னஸ் உலக சாதனையை என்கிற படைத்து உள்ளார். பெரெஸ் தனக்கு 112 வயதாக இருந்தபோது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார், அவர் இன்னும் சில நாட்களில் 113 வயதை எட்ட உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜுவான் விசென்டே பெரெஸ், வெனிசுலாவின் டாச்சிராவில் உள்ள எல் கோப்ரேயில் கடந்த 1909 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி அன்று, யூட்டிகியோ டெல் ரொசாரியோ பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். ஜுவான் இப்போது உயிருடன் இருக்கும் மூத்த மனிதர் என்றாலும் கூட, அவர் குடும்பத்தை பொறுத்தவரை அவருடன் பிறந்த பத்து உடன்பிறப்புகளில் இரண்டாவது இளையவர் ஆவார் அதாவது 9-வது குழந்தையாக பிறந்து உள்ளார்.

சான் ஜோஸ் டி பொலிவரில் உள்ள ஒரு கிராமத்தில், 1914 ஆம் ஆண்டு, தனது 5 வயதில் கரும்பு மற்றும் காஃபி அறுவடையின் போது தனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கு விவசாயத்தில் உதவுவதன் மூலம் ஜுவான் விசென்டே பெரெஸ் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். தற்போது கின்னஸ் உலக சாதனை படைக்கும் அளவிலான வயதை எட்டி, தனது நீண்ட ஆயுளைப் பற்றிய கதையை மற்றவர்களிடம் பகிர்ந்து வருகிறார்.

ஒருமுறை பெரெஸ், காபி மற்றும் கரும்பு உற்பத்திக்கு உதவுவதற்காக தனது சகோதரர் மிகுவலுடன் இணைந்து ட்ராபிச் (மர ஆலை) ஒன்றை உருவாக்கி உள்ளார். பின்னர் தன் பண்ணையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஒரு பெரிய இயந்திரம் ஒன்றையும் வாங்கி உள்ளார். தவிர ஜுவான் தனது வாழ்நாள் முழுவதும் விவசாயம் மட்டுமே செய்யவில்லை, இவர் தன் வாழ்நாளின் பத்து வருடங்கள் ஒரு நகரத்தின் ஷெரிப் பொறுப்பையும் தன் முதுகில் சுமந்து உள்ளார்.

இப்படி பல்வேறு வகையான வாழ்க்கையை வாழ்ந்துள்ள ஜுவான் விசென்டே பெரெஸ் தனக்கான ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்கவும் தவறவில்லை. இவர் எடியோஃபினா டெல் ரொசாரியோ கார்சியா என்கிற பெண்ணை மணந்து - அவர் இறக்கும் வரை - அவருடன் 60 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளார்.

Also see... ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாக வாசித்து சாதனை படைத்த 5 வயது சிறுமி!

தங்களது 60 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஜுவான் மற்றும் எடியோஃபினா தம்பதியினர் ஆறு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் உட்பட மொத்தம் 11 குழந்தைகளை பெற்றெடுத்தனர். தங்களுக்கு ஒரு பெரிய குடும்பம் வேண்டும் என்ற தங்கள் கனவையும் நிறைவேற்றிக் கொண்டனர். பல ஆண்டுகளாக வாழும் இவரின் குடும்பத்தில் மொத்தம் 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

மிகவும் வயது ஆகிவிட்டாலும் கூட ஜுவான் விசென்டே பெரெஸுக்கு உடல்நலம் மற்றும் நினைவாற்றல் உள்ளது. இவர் இன்னமும் தன் உடன்பிறப்புகள், குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் அனைவரின் பெயரையும் நினைவில் வைத்திருக்கிறார். மேலும் தான் வாழ்நாளின் போதே கண்டுபிடிக்கப்பட்ட டிவி மற்றும் இண்டர்நெட் போன்றவைகளையும் ஜுவான் விசென்டே பெரெஸ் பயன்படுத்தி வருகிறார்.

First published:

Tags: Viral