ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது தான் இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கும். குடும்ப கஷ்டங்களை மறந்து இலட்சியம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்து பயணிக்கும் நபர்களின் வாழ்க்கை சில நேரங்களில் தனித்துவமாக இருப்பதோடு, நம்மில் பலருக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமையும். அப்படி மற்றவர்களுக்கு வாழ்க்கையில் உத்வேகத்தை அளிக்கும் இளம் வயது ஐபிஎஸ் அதிகாரி சபின் ஹசன் குறித்த சில சுவாரஸ்சிய பதிவுகள் இங்கே…
குஜராத் மாநிலத்தில் பலன்பூர் என்ற இடத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு ஜுலை 12 ல் பிறந்தவர் தான் சபின் ஹசன். இப்பகுதியில் உள்ள எஸ்கேஎம் பள்ளியில் படித்த போது, விழா ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மட்டுமில்லாது, ஊர்மக்கள் அனைவரும் அதீக மரியாதைக் கொடுத்துள்ளனர். இந்த நிகழ்வைப் பார்த்த பின்னர் தான், தானும் இதுப்போன்ற உயர் அதிகாரி ஆகவேண்டும் என்று எண்ணத்தில் பல முயற்சிகளை எடுத்துள்ளார்.
வறுமையின் பிடியில் இவர்களது குடும்பம் சிக்கித் தவித்தாலும் இளம் வயதில் இருந்தே ஐ.பி.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது இவரின் இலட்சியமாக இருந்தமையால், இவரது பெற்றோர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். தன்னுடைய மகனின் படிப்பிற்கு உதவுமாறு இவரது தாயார் உணவகங்களுக்குச் சப்பாத்தி செய்து கொடுத்து வந்துள்ளார். மேலும் அந்தப்பகுதியில் இருந்த தொழில் அதிபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் படிப்பதற்கு உதவி செய்துள்ளனர்.
Read More : மருத்துவர் சொன்ன ஒரு வார்த்தை...165 கிலோ உடல் எடையை குறைத்த நபர்.. சாத்தியமானது எப்படி?
இப்படி பலரின் உதவியோடு பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பின்னதாக யுபிஎஸ்சி பயிற்சிக்காக டெல்லிக்குச் சென்று பல சவால்களைக் கடந்து இரண்டு ஆண்டுகள் வெற்றிக்கரமாக பயிற்சியை முடித்துள்ளார். பின்னர் 2017 ஆம் ஆண்டு UPSC CSE க்கு ஆஜராக விண்ணப்பித்தார்.
தேர்வுக்கு செல்லும் வழியில் விபத்து : வறுமை, சவால்கள் அத்தனையும் கடந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு தேர்வு மையத்திற்கு சென்றார் ஹசன். தேர்வுக்கு செல்லும் வழியில் பயங்கர விபத்தில் சிக்கிக்கொண்ட பின்னரும், தன்னுடைய ஐபிஎஸ் அதிகாரி கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக படுகாயங்களுடன் தேர்வு மையத்தை நோக்கி சென்றுள்ளார் சபின் ஹசன்.
இத்தனை முயற்சி செய்தும் முதல் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இருந்தபோதும் தனது வெற்றிப்பாதையை நோக்கி பயணித்ததால் தான் 2 வது முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுதி 570 மதிப்பெண் பெற்றார். தன்னுடைய 22 வயதில் அதாவது இளம் வயதில் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரையும் இவர் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் கதையைப் படிக்கும் பலருக்கும், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை இஷ்டத்தோடு கடந்து சென்றால் வெற்றிநிச்சயம் கிடைக்கும் என்ற எண்ணம் தோன்றும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu