• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 95 வயதில் படு சுறுசுறுப்பாக பர்ஃபி விற்று தொழிலதிபரான பாட்டி - இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி!

95 வயதில் படு சுறுசுறுப்பாக பர்ஃபி விற்று தொழிலதிபரான பாட்டி - இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி!

பர்ஃபி விற்று தொழிலதிபரான பாட்டி

பர்ஃபி விற்று தொழிலதிபரான பாட்டி

இவர் தயாரிக்கும் பர்ஃபிக்கள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகிறது.

  • Share this:
சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை மற்றுமொருமுறை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் ஹர்பஜன் கவுர் எனும் 90 வயதான பாட்டி.

அஃபிசியல் ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே (Official Humans of Bombay) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்று ஷேர் செய்யப்பட்டிருந்தது. அதில், ஹர்பஜன் கவுர் எனும் 95 வயது பாட்டி தனது வியாபார அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் நன்றாக சமைப்பார் என்பதால் அதனை வைத்து வியாபாராம் தொடங்கலாம் என 5 வருடங்களுக்கு முன் முடிவெடுத்திருக்கிறார். மேலும் அவரது மகளும் 'ஏன் நீ மார்க்கெட்டில் பர்ஃபி விற்கக் கூடாது?' என்று கேட்க, அது அவருக்கு சரியான யோசனையாக தோன்றியிருக்கிறது.

அவர் வியாபாரத்தைத் துவங்கிய முதல் நாளிலேயே அவரது பர்ஃபிக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்திருக்கிறது. மேலும் முதல் நாள் வருமானமாக அவருக்கு ரூ.2000 கிடைத்திருக்கிறது. இது அவருக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. மேலும் அவரது பர்ஃபியின் சுவை குறித்த தகவல்கள் சுற்றுவட்டாரத்தில் பரவியிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு பெருமளவில் ஆர்டர்கள் குவிந்திருக்கிறது. கொரொனா இரண்டாவது அலையின் போது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவர், அதில் இருந்து ஸ்டிராங்காக மீண்டு வந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர் தயாரிக்கும் பர்ஃபிக்கள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகிறது. இதனால் மிகவும் பிரபலமான இவருக்கு 2020 ம் ஆண்டுக்கான சிறந்த தொழில் முனைவோர் விருது கிடைத்திருக்கிறது. மேலும் அவர் வியாபாரம் செய்வது மட்டும் இல்லாமல், இன்ஸ்டாகிராமிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 12,000 ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். அவருக்காக அவரது பேத்திகள் அவரை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

Also read... ஸ்கூல் பெல்ட் மாதிரி இருக்கு - ரூ.35,000க்கு மகள் வாங்கிய பெல்ட்டை பார்த்து ஷாக்கான அம்மா!

சமீபத்தில் டேன்ஜரின் ஸ்குவாஷ் தயாரிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர் அதில் பல்வேறு வைட்டமின்கள், மினரல்ஸ், நியூட்ரியன்ஸ் உள்ளதால் அது மிகவும் ஆரோக்கியமானது என்றும், புத்துணர்வு தரும் பானமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக வயது, உடல் நிலை என எதையும் பொருட்படுத்தாது உழைப்பதை பார்த்திருப்போம். ஆனால் 90 வயதிலும் ஒரு பாட்டி கடுமையாக உழைக்க முடியும் என சிந்தித்து பார்த்திருக்கிறோமா?. உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வதிலும், புதிய முடிவுகளை எடுப்பதிலும் வயது ஒரு பொறுட்டில்லை என்பதை ஹர்பஜன் கவுர் நிரூபித்திருக்கிறார்.

ஹர்பஜன் கவுர் போன்றவர்கள் தான் இந்த கடினமான நேரத்திலும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். மேலும் ஹர்பஜ் கவுர் எனும் பாட்டியால் 95 வயதில் முடிகிறதென்றால் எல்லோராலும் முடியும். இந்த பாட்டியின் கதை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறதா? பிறகென்ன எதைப் பற்றியும் சிந்திக்காமல் உங்கள் ஆசைகள், கனவுகளை நிறைவேற்ற இன்றே செயல்படத் துவங்குங்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: