• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 7 அடி 0.7 அங்குல உயரம் - உலகின் உயரமான துருக்கி பெண்!

7 அடி 0.7 அங்குல உயரம் - உலகின் உயரமான துருக்கி பெண்!

உலகின் உயரமான துருக்கி பெண்

உலகின் உயரமான துருக்கி பெண்

பல சிக்கல்களை எதிர்கொண்டாலும், கெல்கி நம்பிக்கையோடு பேசுகிறார். "ஒவ்வொரு குறைபாட்டையும், நமக்கு ஏற்றவாறு அனுகூலமாக

  • Share this:
துருக்கி நாட்டைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்பவர் தான் உலகிலேயே உயரமான பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளார். 24 வயதான கெல்கியின் உயரம் 7 அடி 0.7 அங்குலம் (215.16cm) ஆகும். உலகின் உயரமானப் பெண்ணாக (தற்போது உயிரோடு இருப்பவர்களில்) கின்னஸ் புத்தகத்தில் இவருடைய பெயர் பதிவாகியுள்ளது. ஆனால், இவருடைய உயரத்துக்கு இவருக்கு இருக்கும் மரபணு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

கெல்கியின் உயரம் அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு இருப்பதைப் போலவே, இவருடைய கைகளும் பாதங்களும் ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளன. இவரின் கைகளின் நீளம் 24.5 cm மற்றும் கால்களின் அளவீடு 30.5 cm ஆகும்.

ருமேசா கெல்கி இவ்வளவு உயரமாக வளர்ந்தார்? கெல்கியின் வளர்ச்சி இயற்கையானது அல்ல. ருமேசா கெல்கி இவ்வளவு உயரமாக இருப்பதற்கு முக்கிய காரணம் வீவர்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் மரபணுக் கோளாறு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இது ஒரு அரிதான மரபணுக் கோளாறு என்றும், இந்த கோளாறு உடலில் அதி வேக வளர்ச்சியைத் தூண்டுகின்றன என்றும் கூறுகிறார்கள்.

மரபணு பிரச்சனையால் இவ்வளவு உயரமாக இருப்பது, ருமேசாவுக்கு பல விதங்களில் சிக்கலாக உள்ளது. இவரின் உயரம் காரணமாகவே இவரால் மற்றவர்களைப் போல சாதாரணமாக நடக்க முடியாது. அதீத உயரம் நிலைத்தன்மையை பாதித்துள்ளது. கெல்கி பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகி உள்ளார். பல இடங்களில் சக்கர நாற்காலி பயன்படுத்தினாலும், சில நேரங்களில் இவர் வாக்கரைப் பயன்படுத்தி நடக்கிறார்.

பல வித உடல் நல பாதிப்புகளை எதிர்கொண்டாலும், கெல்கி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய அரிதான மரபணு கோளாறைப் பற்றி தெரிவிக்கத் தயங்குவதில்லை.

பல சிக்கல்களை எதிர்கொண்டாலும், கெல்கி நம்பிக்கையோடு பேசுகிறார். "ஒவ்வொரு குறைபாட்டையும், நமக்கு ஏற்றவாறு அனுகூலமாக மாற்றிக்கொள்ள முடியும். எனவே, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதை அவ்வாறே ஏற்றுக்கொண்டு, உங்களுடைய திறன் மற்றும் நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் உணரலாம்.

கெல்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்த புகைப்படம் இங்கே. 
View this post on Instagram

 

A post shared by RUMEYSA GELGI (@rumeysagelgi)


கின்னஸ் உலகப் புத்தகத்தின் தலைமை எடிட்டறான் கிரெய்க் கிளேன்டே கூறுகையில், "ருமேசாவை கின்னஸ் உலகப் புத்தகத்தில் வரவேற்பது எங்களுக்குக் கிடைத்த பெரிய மரியாதை. அவரின் உடைக்க முடியாத மனதைரியமும், கலங்காத குணமும், கூட்டத்தினருக்கு, கூட்டத்தினருக்கு இடையே தனித்துவமாக இருப்பதும், இவர் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறார். உயரமான வாழும் பெண் என்பது அடிக்கடி மாறப்போவதில்லை. அதனாலேயே, இவரைப் பற்றி உலகம் முழுவதும் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என கூறுகிறார்.

Also read... இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்த அதிசய ‘கன்றுக்குட்டி’ - தெய்வமாக வழிபடும் மக்கள்!

இதனிடையே சுல்தான் கோசென் என்பவர் உலகின் உயரமான ஆணாக கின்னஸ் உலகப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். இவரின் உயரம், 8 அடி, 2.8 அங்குலங்கள் ஆகும். ஐவரும், துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் உயரமான ஆண் மற்றும் பெண் என்று கின்னஸ் உலகப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இருவருமே துருக்கியை தாய்நாடாகக் கொண்டவர் என்பது ஆச்சரியமானது மட்டுமல்ல, அரிதாகவே காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: