Home /News /trend /

McDonald’s கஸ்டமர் பதிவிட்ட பல்லி விழுந்த குளிர்பான வீடியோ! சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்!

McDonald’s கஸ்டமர் பதிவிட்ட பல்லி விழுந்த குளிர்பான வீடியோ! சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்!

Image : (Source : Twitter)

Image : (Source : Twitter)

McDonald’s | மெக் டொனால்டு விற்பனை நிலையத்தின் வாடிக்கையாளர் ஒருவர் தனது குளிர் பானத்தில் பல்லி மிதப்பதைக் காட்டும் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவை பதிவிட்ட சில மணி நேரங்களில் வைரலானது.

இன்றைய கால கட்டத்தில் உணவின் தரமானது மிகவும் கேள்விக்குறியான ஒன்றாக மாறி உள்ளது. நாம் சாப்பிடக் கூடிய உணவு விஷமாக மாறும் அளவிற்கு மோசமடைந்து வருகிறது. குறிப்பாக ஃபாஸ்ட் ஃபூட்ஸ் என்று அழைக்கப்படும் உணவு வகைகள் நமது உயிருக்கே எமனாக உள்ளது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் எல்லோரும் இந்த ஆபத்தை அறியாமல் இது போன்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, சிலர் உணவின் தன்மை குறித்து கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை.

அதாவது, உணவின் தன்மை சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து கண்டு கொள்வதில்லை. ஏராளமான உணவு வகைகள் இருந்தாலும், அவற்றில் எது சுத்தமாக உள்ளது என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது இல்லை. உணவு சுகாதாரத்தை பற்றி சமீப காலமாக பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. கெட்டு போன உணவுகள், நாள்பட்ட இறைச்சி உணவு, சுத்தமற்ற உணவு தயாரிக்கும் இடம் போன்ற காரணங்களால் ஒரு உணவானது விஷத்திற்கு சமமாக மாறி விடுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது மெக்டொனால்டு கஸ்டமர் ஒருவருக்கு நடந்துள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மெக்டொனால்டு விற்பனை நிலையத்தின் வாடிக்கையாளர் ஒருவர் தனது குளிர்பானத்தில் பல்லி மிதப்பதைக் காட்டும் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவை பதிவிட்ட சில மணி நேரங்களில் வைரலானது. பலரும் இதுகுறித்த கேள்விகளை கேட்கவும் தொடங்கினர். இவ்வளவு சுகாதாரமற்ற உணவை தான் பரிமாறுகிறார்களா என்கிற அச்சம் மக்களுக்கு எழ தொடங்கியது.இந்த வீடியோவை பார்கவ் ஜோஷி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகாரின் அடிப்படையில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (AMC) இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியது. அகமதாபாத் நகரின் சோலா பகுதியில் அமைந்துள்ள மெக்டொனால்டு விற்பனை நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு, நகரின் பொது சுகாதார ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலரிடமிருந்து குளிர்பான மாதிரிகள் மெக் டொனால்டு விற்பனை நிலையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.

Also Read : கால்வாய் தண்ணீர் உடன் பாத்திரம் கழுவும் சாலையோர உணவுக்கடை ஊழியர் - அதிர்ச்சி வீடியோ

பொது சுகாதார பாதுகாப்பிற்காக, துரித உணவு விற்பனை நிலையமான மெக் டொனால்டு ஃபிரான்ஸிஸ்க்கு சீல் வைத்து மூடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி விற்பனை நிலையம் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து, மெக் டொனால்டு நிறுவனம் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில் ஃபாஸ்ட் பூட் நிறுவனமான மெக் டொனால்டு இந்த சம்பவத்தை விசாரித்து வருவதாகவும், அதிகாரிகளுடன் எல்லா விதத்திலும் ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளது.

Also Read : Swiggy-யில் கேக் ஆர்டர் செய்திருந்தவருக்கு காத்திருந்த ஷாக்

இந்நிறுவனம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை குறித்தும் விவரித்தது. "42 கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறைகளுடன்" கோல்டன் உத்தரவாதத் திட்டத்தை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது அனைத்து மெக்டொனால்டு விற்பனை நிலையங்களிலும் செயல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி