HOME»NEWS»TREND»mcdoalds with ice cream combo makes fun on social media srs ghta

'யாருப்பா அந்த ஷெஃப்..' நெட்டிசன்களை கதறவிட்ட உணவு - வைரல் வீடியோ..

மெக்டொனால்ட் சிக்கன் பர்கருடன், ஐஸ் கிரீமை சேர்த்து புதிய பாஸ்புட் உணவை உருவாக்கிய, அந்த புதிய 'ஷெப்' - ஐ நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

'யாருப்பா அந்த ஷெஃப்..' நெட்டிசன்களை கதறவிட்ட உணவு - வைரல் வீடியோ..
மெக்டொனால்ட் சிக்கன் பர்கர் ஐஸ்கிரீம்
  • Share this:

மெக்டொனால்ட் சிக்கன் பர்கருடன், ஐஸ் கிரீமை சேர்த்து புதிய பாஸ்புட் உணவை உருவாக்கிய, அந்த புதிய 'ஷெப்' - ஐ நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக விநோத உணவு காம்போக்கள், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருவதால் புதிய உணவு வகைகளை கண்டுபிடிப்பதில் சமையல் வல்லுநர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.  உணவுப் பிரியர்களும் புதிய உணவு காம்போக்களை தேடி தேடி உண்ணுகின்றனர். சிலர், எதிரெதிர் பண்புகளைக் கொண்ட உணவுகளை சேர்த்தும் புதிய காம்போ என சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.  இதற்கு, போதிய வரவேற்பு இல்லையென்றாலும் சமூகவலைதளங்களில் அதிக லைக்ஸ் மற்றும் பார்வைகளை பெறுவதற்கு இந்த யுக்தியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தமாதிரியான ஒரு உணவு காம்போ ஷெப் ஒருவர் உருவாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உணவுப் பிரியர்களையும், நெட்டிசன்களையும் கதிகலங்க வைத்துள்ளது. அதாவது, மெக்டொனால்ட் சிக்கன் பர்கரை ஆர்டர் செய்து வாங்கும் அந்த ஷெப், அதனை சிறுசிறு துண்டுகளாக மாஷ்அப் செய்து விடுகிறார். பின்னர், அதனுடன் ஐஸ் கிரீமை கலந்து மீண்டு மாஸ்அப் செய்கிறார். இறுதியில், அதனை ரோலாக உருட்டி பாக்ஸ் ஒன்றில் அடைத்து புதிய காம்போ உருவாக்கப்பட்டதுபோல் காண்பிக்கிறார்.

ஐஸ்கிரீமுடன் சிக்கனை சேர்த்து எப்படி சாப்பிட முடியும் என புலம்பும் நெட்டிசன்கள், அவர்களால் எப்படி இதுபோன்று விநோதமாக சிந்திக்க முடிகிறது என கேள்வி எழுப்பியுள்ளனர். சிக்கன் பர்கர் + ஐஸ்கிரீம் என்ற காம்போவின் பெயரைக் கேட்டாலே அருவறுப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள உணவுப் பிரியர்கள், அந்த மூளைக்கார 'ஷெப்' -ஐ வலைவீசி தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இன்னும் சிலர், கடும் கோபத்துடன் தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். நேராக கிடைத்தால் முகத்தில் பளார் என்று ஒரு அறை விட்டுவிடுவேன் என சில நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். கிவி பீட்சா, சாக்லெட் மேகி, குலோப் ஜாமூன் பேன்கேக்ஸ்,  அன்கூரி ரசகுல்லா பிரியாணி போன்ற வித்தியாசமான காம்போக்கள் தற்போது டிரெண்டிங்கில் இருந்தாலும், சிக்கன் பர்கருடன் ஐஸ் கிரீமையும், பாலையும் சேர்த்து எப்படி உண்ண முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.



தர்ஷன் பதாக் என்பவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேலான பார்வைகளை கடந்துள்ளது. அதில், மெக்டெனால்ட் இந்த வீடியோவை பார்த்தபிறகு சிக்கன் பர்கர் செய்வதை நிறுத்திவிடும் என நம்புகிறேன் என காமெடியாக கூறியுள்ளார்.
Published by:Ram Sankar
First published: