ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மணமகன் கண்டிப்பா 90ஸ் கிட்ஸா இருக்க கூடாது - பெண் கொடுத்த விளம்பரம் வைரல்

மணமகன் கண்டிப்பா 90ஸ் கிட்ஸா இருக்க கூடாது - பெண் கொடுத்த விளம்பரம் வைரல்

பெண் கொடுத்த விளம்பரம் வைரல்

பெண் கொடுத்த விளம்பரம் வைரல்

Viral | பெண் ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டி கொடுத்துள்ள விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பேசு பொருளாக மாறியிருக்கின்றன.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருமணத்திற்கு வரன் தேடி மேட்ரிமோனியல் தளங்கள், நாளிதழ்கள் போன்றவற்றில் கொடுக்கப்படும் விளம்பரங்கள் சில சுவாரஸ்யமாகவும், சமூகத்தில் விவாதத்தை தூண்டும் வகையிலும் இருக்கின்றன. தனக்கு வரப்போகும் மணமகன் அல்லது மணமகள் என்ன படித்திருக்க வேண்டும் என்பதில் தொடங்கி வயது வரம்பு, வருமான எதிர்பார்ப்பு, உடல் நிறம் என பல வகை எதிர்பார்ப்புகளை நிபந்தனைகளாக குறிப்பிடுகின்றனர்.

  இந்த நிபந்தனைகள் யதார்த்த சிந்தனைகளுக்கு மீறியதாக இருக்கும்போது அவை விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. குறிப்பாக, அந்த விளம்பரங்களை படம் பிடித்து சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடும் பட்சத்தில் அது வைரல் ஆகி விடுகிறது. அது மட்டுமல்லாமல், சமூகத்தின் பல படிநிலைகளில் உள்ள மக்கள் அதுகுறித்து ஆன்லைனில் விவாதிக்க தொடங்கி விடுகின்றனர்.

  அந்த வகையில், பெண் ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டி கொடுத்துள்ள விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பேசு பொருளாக மாறியிருக்கின்றன.

  1992க்கு முன்னாடி பிறந்தவர்கள் வேண்டாம்

  வரன் தேடும் ஒவ்வொருவரும், இந்த வயதில் இருந்து இத்தனை வயதிற்குள் வரன் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிடுவது வழக்கம் தான். இந்தப் பெண் அதை சற்று நேரடியாகவே குறிப்பிட்டு விட்டார். அதாவது 1992ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பிறந்தவர்கள் வேண்டவே வேண்டாம் என்பது அவரது கண்டிஷன்.

  என்ன படித்திருக்க வேண்டும்

  வழக்கமாக எல்லோரும் எதிர்பார்க்கும் நிபந்தனை தான் இது. தனக்கு ஈடான கல்வித் தகுதியை, எதிர்கால வாழ்க்கை துணை படித்திருக்க வேண்டும் என்பது நியாயமான விருப்பம் தான். ஆனால், இந்தப் பெண்ணின் நிபந்தனை எப்படி வேறுபடுகிறது என்றால், அந்தக் கல்வியை எங்கு படித்திருக்க வேண்டும் என்று கூடுதல் வரையறை ஒன்றை நிர்ணயம் செய்திருக்கிறார்.

  Also Read : இந்த புகைப்படத்தில் இருப்பது எறும்பின் முகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

  அதாவது மாப்பிள்ளை எம்பிஏ, எம்டெக், எம்ஸ், பிஜிடிஎம் படித்தவராக இருக்க வேண்டுமாம். அதுவும் மும்பை, மதுரா, கான்பூர், டெல்லி, ரூர்கே, கராக்பூர், கௌஹாத்தி போன்ற இடங்களில் உள்ள ஐஐடி பல்கலைக்கழகங்கள் அல்லது கேலிகட், டெல்லி, குருஷேத்ரா, ஜலந்தர், திருச்சி, சூரத்கால், வாரங்கால் போன்ற இடங்களில் உள்ள என்ஐடி கல்வி நிலையங்களில் படித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  இது மட்டுமல்லாமல் ஐஐஎஸ்சி பெங்களூரு, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா ஐஐஎம் என்று நாட்டில் உள்ள பெரும்பாலான முன்னணி கல்வி நிறுவனங்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.

  சம்பளம் 30 போதும்!!

  சம்பளம் 30 என்றால் வெறும் 30 அல்லது 30 ஆயிரம் அல்ல. ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டுமாம். நல்லவேளை மாதத்திற்கு 30 லட்சம் வேண்டும் என கேட்காமல் விட்டாரே என்று சிங்கிள்ஸ் ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

  மணமகன் உடல் வாகு மற்றும் குடும்பம்

  மணமகனின் உயரம் 5.7 அடி முதல் 6 அடிக்குள் இருக்க வேண்டுமாம். குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் இருவர் மட்டுமே இருக்கின்ற வகையில் சின்ன குடும்பமாக இருக்க வேண்டுமாம். குறிப்பாக குடும்பத்தில் உள்ள அனைவரும் படித்திருக்க வேண்டும் என்பது அந்தப் பெண்ணின் முக்கியமான கண்டிஷன்.

  இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இந்தப் பெண் திருமணத்திற்கு மாப்பிள்ளை எதிர்பார்க்கிறாரா அல்லது வாடகைக்கு கணவரை எதிர்பார்க்கிறாரா என்று நெட்டிசன் ஒருவர் விமர்சித்துள்ளார். அதே சமயம், ஒவ்வொரு நபருக்கும் தங்கள் விருப்பத்தை கூற உரிமை உண்டு என்று மற்றொரு பயனாளர் கூறியுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral