ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நீங்கள் கணக்கில் புலியா? இந்த புதிருக்கு விடை கண்டுபிடிங்கள்!

நீங்கள் கணக்கில் புலியா? இந்த புதிருக்கு விடை கண்டுபிடிங்கள்!

விடையை கண்டுபிடிங்க..

விடையை கண்டுபிடிங்க..

Optical Illusion2 | நீங்கள் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுகிறீர்கள். அவர் உங்களுக்கு மூன்று மாத்திரைகளை கொடுத்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ள சொல்கிறார். நீங்கள் மொத்த மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிருக்கு விடை கண்டுபிடிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். அதிலும் கணிதத்தில் வல்லவர்களாக இருப்பவர்களுக்கு தங்கள் திறமையை தாங்களே பரிசோதித்துக் கொள்ள இந்த புதிர் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

உங்களுக்கு கணக்கில் வல்லவராக வேண்டும் என்று ஆசை இருந்தும் இன்னும் அதனை நிறைவேற்ற முடியவில்லை எனில் கவலை வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டிருப்பது போன்று சில புதிர்களில் கவனம் செலுத்தி அவற்றை தீர்ப்பதன் மூலம் உங்கள் கணித திறமையை படிப்படியாக மெருகேற்றிக் கொண்டு கணிதத்தில் வல்லவராக மாறலாம்.

புதிர் ஒன்று:

கீழ் கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டை ஒரே ஒரு நேர்கோடு வரைவதன் மூலம் தீர்க்கவும்:

5+5+5=550

குழப்பமாக உள்ளதா. இதுவும் ஒரு வகை கணித புதிர் தான்!

Read More : இந்த படத்தில் ஒளிந்துள்ள புலிகளை 11 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

புதிர் இரண்டு:

நீங்கள் உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுகிறீர்கள். அவர் உங்களுக்கு மூன்று மாத்திரைகளை கொடுத்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ள சொல்கிறார். நீங்கள் மொத்த மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

புதிர் மூன்று:

2 மற்றும் 11 ஆகிய எங்களை சேர்த்தால் 1 கிடைக்குமா?

கண்டிப்பாக கிடைக்கும்! யோசியுங்கள்!

என்ன மூன்று புதிர்களுக்கும் விடை கண்டுபிடித்து விட்டீர்களா? உங்கள் விடை சரியானதா என்பதை பார்க்கவும் விடை தெரியவில்லை என்றால் சரியான விடையை கண்டுபிடிப்பதற்கும் தொடர்ந்து படியுங்கள்.

புதிர் ஒன்று:

இதனை நீங்கள் இரண்டு விதங்களில் தீர்க்கலாம்:

முறை 1: முதலில் உள்ள கூட்டல் கூறியுவுடன் ஒரு நேர்கோட்டை சேர்ப்பதன் மூலம் அதனை எண் 4- ஆக மாற்றலாம்.

முறை 2: இந்த முறையில் சம குறியீட்டின் மீது குறுக்கே ஒரு கோடு வரைவதின் மூலம் இது ஒரு சமமற்ற சமன்பாடு என்று தீர்வை நிறுவலாம்.

புதிர் இரண்டு:

மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைத்தபடி மொத்தமாக உள்ள மூன்று மாத்திரைகளை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மாத்திரை வீதம் நீங்கள் விழுங்க வேண்டும். எனில் அவற்றை விழுங்க மொத்தமாக உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்.

விடை:

ஒரு மணி நேரம். ஏனெனில் முதல் மாத்திரையை எடுப்பதற்கு உங்களுக்கு அரை மணி நேரம் எடுக்காது. அதன்பின் இரண்டாம் மாத்திரைக்கு அரை மணி நேரமும் மூன்றாம் மாத்திரை எடுக்கும் போது ஒரு மணி நேரம் கடந்திருக்கும்.

புதிர் மூன்று:

2 மற்றும் 11 ஆகிய எண்களை சேர்த்தால் 1 கிடைக்குமா?

இன்னும் விடை கிடைக்கவில்லையா? கணிதம் அல்லது எண்களை மறந்து வேறு ஏதேனும் விடை கிடைக்குமிடம் அல்லது எண்கள் இருக்கும் இடத்தை நினைவு கூற முடிகிறதா என்று பாருங்கள். இன்னும் யோசிக்க முடியவில்லை?

கடிகாரத்தில் பாருங்கள்!

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral