ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Math Riddles | மூளைக்கு சவால்.. காலியாக உள்ள கட்டத்திற்கான சரியான எண்ணை கணடுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

Math Riddles | மூளைக்கு சவால்.. காலியாக உள்ள கட்டத்திற்கான சரியான எண்ணை கணடுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

கணக்கு புதிர்

கணக்கு புதிர்

Math Riddles | இந்த சுவாரஸ்யமான மற்றும் கடினமான கணித புதிரைத் தீர்ப்பதற்கான விடையையும் நாங்களே கொடுத்து விடுவோம்... எனவே எவ்வித அச்சமும் இன்றி, ஒரே ஒருமுறை விடையை கண்டுபிடிக்க முடிகிறதா? இல்லையா? என்பதை முயற்சித்துப் பாருங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூஷன், பிரெயின் டீசர் என பலவகையான புதிர் விளையாட்டுக்கள் பற்றி பார்த்திருப்போம். இதில் ஆப்டிகல் இல்யூஷன்கள் மூளையின் சிக்கல்களை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. மேலும் மனிதர்களின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தவும் சிறந்த வழியாக உள்ளது. தற்போது ஆளுமை திறன், உருவங்களை கண்டுபிடிப்பது போன்ற விஷயங்கள் மூலமாக மூளையின் திறனை கணிக்க உதவுகின்றன. அதேபோல் பிரெயின் டீசர்கள், குறிப்பிட்ட விஷயத்தில் மூளை வித்தியாசமாக செயல்பட்டு, அதனை பகுத்தறிய உதவுகிறது. ஆப்டிகல் இல்யூஷன்கள் போல் அல்லாமல், பிரெயின் டீசர்கள் எதையும் ஒரு குறுகிய வட்டத்திற்கு சிந்திக்காமல் அவுட் ஆப் தி பாக்ஸ் சிந்தனையை தூண்டவும், சிக்கலான புதிரை வித்தியாசமாக சிந்தித்து தீர்க்கவும் உதவுகிறது.

ஆனால் இவை இரண்டையும் விட சுவாரஸ்யமானதாகவும், கடினமானதாகவும் கணக்கு புதிர்கள் உள்ளன. பள்ளி படிக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இன்றைக்கும் கூட பலரும் கணக்கு என்ற சப்ஜெட்டை தனக்கு பிடிக்கவே, பிடிக்காது என அடித்து கூறுவார்கள். அதற்கு காரணம் எண் கணிதத்திற்கான விடைகளை கண்டறிவது அவ்வளவு எளிதானது கிடையாது என்பதால் தான். ஆனால் இப்போது நாங்கள் கணிதத்தையே புதிராக கொண்டு வந்துள்ளோம். “என்னடா இது?.. புதிருக்கு விடை கண்டுபிடிப்பதே பெரும்பாடு... இதில் கணக்கை வைத்து புதிரா?” என அதிர்ச்சி அடையலாம்.

இந்த சுவாரஸ்யமான மற்றும் கடினமான கணித புதிரைத் தீர்ப்பதற்கான விடையையும் நாங்களே கொடுத்து விடுவோம்... எனவே எவ்வித அச்சமும் இன்றி, ஒரே ஒருமுறை விடையை கண்டுபிடிக்க முடிகிறதா? இல்லையா? என்பதை முயற்சித்துப் பாருங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தைப் பாருங்கள். அந்த விடுபட்ட எண் தொடர் புதிரில், ஒவ்வொரு கணிதப் பிரச்சனையிலும் கேள்விக்குறியின் இடத்தில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களின் பகுப்பாய்வு சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், உங்கள் கணிதத் திறனை மேம்படுத்தவும் இந்த பயிற்சி உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நட்சத்திரம் மற்றும் கட்டத்திற்குள் உள்ள எண்களின் விடுபட்ட எண்ணை கண்டுபிடிக்கலாம் வாங்க...

Also Read : எல்லாமே ஆச்சரியம்தான்.. அதிசயக்க வைக்கும் யானைகள்!

கட்டத்திற்குள் விடுபட்ட எண் எது?

இதனை கண்டறிய முதலில் மூன்று வரிசைகளில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு வரிசையையும் கிடைமட்டமாக கூட்டினால், 15,17,19 ஆகிய கூட்டுத்தொகை கிடைக்கும். இதனை நன்றாக உற்று கவனித்தால், முதல் வரிசையை விட அடுத்த வரிசையின் கூட்டுத்தொகையில் இரண்டு எண்கள் அதிகம் இருப்பதைக் காணலாம்.

அப்படியானால் கடைசி தொடரின் கூட்டுத்தொகை 21 ஆக இருக்க வேண்டும். ஆனால் 4+8+2 = 14 தான் வருகிறது. இப்போது கேள்விக்குறியுள்ள கட்டத்திற்குள் கூட்டுத்தொகை 21 வருவதற்கான எண்ணை நிரப்ப வேண்டும். அதாவது 14 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் 21 வரும் என சிந்தியுங்கள். ஆம், 14 உடன் 7-யைக் கூட்டினால் 21 என்ற கூட்டுத்தொகை கிடைக்கும் . அப்படியானால் கடைசி கட்டத்திற்கான விடுபட்ட எண் 7 என்பது உறுதியாகிறது.

நட்சத்திர வடிவிலான புதிர்:

நட்சத்திர வடிவிலான கணித புதிரில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்க கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எண்ணையும் 2 ஆல் பெருக்கி, 2 உடன் கூட்ட வேண்டும். அப்படி செய்தால் கிடைக்கும் விடையானது, அதற்கு நேர் எதிரே உள்ள கட்டத்தின் எண்ணாக இருப்பதைக் காணலாம். அதாவது,

= (13X2) +2 = 28 (13க்கு நேர் எதிராக உள்ள எண்)

=(16X2) + 2 = 34 (16க்கு எதிராக உள்ள எண்ணை பார்க்கவும்)

=(20X2) + 2 = 42 (20க்கு எதிரே உள்ள காலியான கட்டத்தில் இந்த விடையை பொருத்த வேண்டும்).

அதாவது விடுபட்ட கட்டத்திற்கான சரியான எண் 42 ஆகும்.

Published by:Selvi M
First published:

Tags: IQ Test, Tamil News, Trending