Home /News /trend /

13 வயதிலேயே யூடியூப் சேனலில் லட்சங்களில் சம்பாதிக்கும் சிறுவன்... யார் இவர்?

13 வயதிலேயே யூடியூப் சேனலில் லட்சங்களில் சம்பாதிக்கும் சிறுவன்... யார் இவர்?

13 வயதிலேயே லட்சங்களில் சம்பாதிக்கும் சிறுவன்! ஒமரி மெக்வீன்

13 வயதிலேயே லட்சங்களில் சம்பாதிக்கும் சிறுவன்! ஒமரி மெக்வீன்

பள்ளியில் பாடங்களை கற்க மாணவர்கள் சிரமப்படும் 13 வயதில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் சிறுவன் ஒருவர் சோசியல் மீடியாவில் பிரபலமாகி வருகிறார்.

  பள்ளி படிக்கும் காலங்களில் குழந்தைகள் வேலை செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் வறுமை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக குழந்தைகள் படிப்பை கைவிட்டு, முழு நேர குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர். ஆனால் அமெரிக்கா, இங்கிலாஎது போன்ற மேற்கத்திய நாடுகளில் குழந்தைகள் தங்களது சொந்த முயற்சி மூலமாக பணம் ஈட்டுவது ஊக்குவிக்கப்படுகிறது. பள்ளிகளிலேயே கூட ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கம் போன்ற குழுக்கள் மூலமாக சிறுவர், சிறுமிகளை தாங்களே தயாரித்த உணவு பொருட்களை விற்பனை செய்து, ஏதாவது ஒரு அறக்கட்டளை அல்லது சமூக அமைப்பிற்கு நிதியாக வழங்கும் நடைமுறையை கடைபிடிக்கின்றனர்.

  இதன் மூலம் பிள்ளைகளுக்கு உதவும் மனப்பான்மையோடு, ஒருபொருளை எப்படி தயாரிக்க வேண்டும், வாடிக்கையாளரிடம் பேசி எப்படி விற்பனை செய்ய வேண்டும் போன்ற வியாபார தந்திரங்களையும் மாணவர்கள் கற்க பள்ளி நிர்வாகமே உதவுகிறது.

  தற்போது சோசியல் மீடியாக்கள் இளம் தலைமுறையினரை முற்றிலும் ஆக்கிரமித்து வரும் நிலையில், சிலர் மட்டுமே அதனை ஆக்கப்பூர்வமாகவும், தனது திறமைகளை வெளிக்கோணர உதவும் தளமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர், இளம் வயது செஃப், இளம் தொழில்முனைவோர் என 13 வயதிலேயே பன்முக திறமைகளோடு பிரபலமாகி வருகிறார்.

  Read More : ஆத்தாடி என்னா ஒரு வேகம்... பேருந்தை தாக்க முயன்ற ஒற்றை காட்டு யானை!


  லண்டனைச் சேர்ந்த ஒமரி மெக்வீன் என்ற 13 வயது சிறுவன், ‘வீகன் சமையல்’ எனப்படும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்த்து முற்றிலும் தாவரங்களை மட்டுமே சார்ந்திருக்க கூடிய பிரத்யேக சமையற்கலையில் இளம் மாஸ்டாராக திகழ்ந்து வருகிறார். மேலும் தனது சொந்த யூடியூப் சேனலான ஒமரி கோஸ் வைல்ட் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரும் 28,000 பேருடன் வீகன் சமையற்கலை குறித்த குறிப்புகள் மற்றும் ரெசிப்பிக்களை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் இளம் வயதிலேயே சிறந்த சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸராக மாறியுள்ள ஒமரி மெக்வீன், இதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by DIPALICIOUS (@dipaliciousltd)


  டிபாலிசியஸ் டிப்ஸ் (Dipalicious dips) என்ற நிறுவனத்தின் சிஇஓவாக செயல்பட்டு வரும் ஒமரி மெக்வீன், இந்நிறுவனம் மூலமாக ஆரோக்கியமான, சுவையான ஸ்நாக்ஸ் மற்றும் அதற்கு ஏற்ற சாஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் வீகன் உணவுகளை தயார் செய்வது எப்படி என்பது குறித்த சமையல் புத்தங்களையும் எழுதி வரும் ஒமரி மெக்வீன் , பிரிட்டனின் இளம் விருது வென்ற டிவி செஃப் மற்றும் குக் புக் ஆத்தராக வலம் வருகிறார்.

  இந்த திறமைகளைக் கொண்டு உலக பிரபலமாக வலம் வரும் ஒமரிக்கு ‘டிஸ்லெக்ஸியா’ குறைபாடு உள்ளது. அதாவது எந்த ஒரு தகவலையும் புரிந்து படிக்க இயலாத நிலைக்கு ‘டிஸ்லெக்ஸியா’ எனப் பெயர். இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் எழுத்துக்களை அடையாளம் காண்பது, தனது தாய் மொழியை பேசுவது போன்ற பல விஷயங்களை சிரமமாக உணர்வார்கள்.

  இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தாலும் தனது மகன் சுயமாக சம்பாதித்து வரும் பணத்தை வைத்து உலகம் முழுவதும் பிரத்யேக வீகன் உணவகங்களை திறக்க முயன்று வருவதாக அவரது தாயார் பெருமையுடன் தெரிவித்துள்ளார். பள்ளிப் படிப்பை தொடர முடியாவிட்டாலும், சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸ், டிபாலிசியஸ் டிப்ஸ் நிறுவனம், குக் புக் எழுதுவது போன்றவற்றின் மூலமாக ஒமரி மெக்வீன் தனது 13 வயதிலேயே 6 இலக்க சம்பளத்தை சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

   

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral

  அடுத்த செய்தி