Home /News /trend /

சூட்கேசில் மறைத்து காதலியை கல்லூரி விடுதிக்கு எடுத்துச் சென்ற மாணவர் - கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரல்..

சூட்கேசில் மறைத்து காதலியை கல்லூரி விடுதிக்கு எடுத்துச் சென்ற மாணவர் - கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரல்..

manipal suitcase incident

manipal suitcase incident

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்தவர்கள் சிரித்து சிரித்தே செத்துவிடுவோம் என பதிவிட்டுள்ளனர்.

    சூட்கேசிற்குள் தனது காதலியை மறைத்து வைத்து கல்லூரியின் விடுதிக்கு எடுத்துச் சென்ற மாணவர் கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், ட்விட்டரில் இதனை கலாய்த்து மீம்கள் பறக்கின்றன.

    சமூக வலைத்தளங்களில் சில எதார்த்தமான வீடியோக்கள் திடீரென பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி விடுவதுண்டு.. அந்த வகையில் நேற்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் புதிய ட்ரெண்டை உருவாக்கியது. அந்த வீடியோவை மையமாக வைத்து பல மீம்களும் பகிரப்பட்டன. கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரியின் விடுதிக்குள் சூட்கேசில் மறைத்து வைத்து தனது காதலியை அழைத்துச் செல்ல முயன்ற போது கையும் களவுமாக சிக்கியதே இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்கும் காரணமாக இருந்தது.

    கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டமான உடுப்பியில் உள்ள ‘மனிப்பால்’ என்ற ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவில், கல்லூரி மாணவர் இரவில் மிகப்பெரிய சூட்கேஸ் ஒன்றுடன் தட்டுத்தடுமாறி நடந்து கல்லூரியின் விடுதிக்கு வருகிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் அந்த மாணவரின் கொண்டு வந்த சூட்கேஸ் மிகப்பெரிய அளவில் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதியின் பாதுகாவலர்கள், அதில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர்.



    ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை எடுத்து வருவதாக அந்த கல்லூரி மாணவர் கூறியபோதும், சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள விரும்பிய பாதுகாவலர்கள் சூட்கேசை திறந்துகாட்டுமாறு கூறியிருக்கின்றனர். அந்த மாணவர் எவ்வளவோ சாக்கு போக்கு கூறி சமாளித்த போதிலும், பாதுகாவலர்களை சமாளிக்க இயலவில்லை. இதனையடுத்து அந்த சூட்கேசின் ஜிப்பை திறந்த போது, அதனுள் ஒரு பெண் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்த செக்யூரிட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் அந்த மாணவரின் காதலி தான். விடுதிக்குள் அந்நியர்கள் யாரையும் உள்ளே விட மாட்டார்கள் என்பதால், தந்திரமாக தனது காதலியை சூட்கேசில் மறைத்து உள்ளே கொண்டு செல்ல முயன்றபோது தான் அந்த மாணவரும், காதலியும் கையும் களவுமாக சிக்கியிருக்கின்றனர். அந்த காதலியும் அதே கல்லூரி மாணவி எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களின் ஹாட்டாக பரவி வருகிறது.

    பழைய வீடியோ - கல்வி நிறுவனம் மறுப்பு:

    இந்த வீடியோவாவில் குறிப்பிடப்படும் சம்பவம் புகழ்பெற்ற Manipal Adademy of Higher Education கல்வி நிறுவனத்தில் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், அக்கல்வி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.பி கார்,  இதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.  தங்கள் கல்வி நிறுவனங்களில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் 2019ம் ஆண்டில் இதுபோல ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

     

    Spokesperson Statement




    பழைய வீடியோவாக இருப்பினும் தற்போது இது இணையவாசிகளிடையே புதிய ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறது. இந்த வீடியோவை இணையத்தில் பார்த்தவர்கள் சிரித்து சிரித்தே செத்துவிடுவோம் என பதிவிட்டுள்ளனர். காதலியை மறைத்த காதலன் குறித்த பல்வேறு மீம்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. #Manipal என்ற ஹேஷ்டேகில் இது தொடர்பான மீம்களை பார்த்து ரசியுங்கள்!!







    இச்சம்பவம் குறித்த ட்வீட்களால் Manipal ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Memes, Trending, Viral

    அடுத்த செய்தி