ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Flipkart இல் கேமிங் லேப்டாப்பை ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி...

Flipkart இல் கேமிங் லேப்டாப்பை ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி...

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

Flipkart | தீபாவளி விற்பனையின் போது கேமிங் லேப்டாப்பை ஆர்டர் செய்திருந்த நபருக்கு ஒரு பெரிய கல் மற்றும் மின் கழிவுகளை அனுப்பிவைத்த Flipkart.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளியை முன்னிட்டு பல முன்னணி இ-காமர்ஸ் தளங்களான அமேசான், பிளிப்கார்ட் போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஏகப்பட்ட ஆஃபர்கள், தள்ளுபடிகளை வழங்கினார். தற்போது Flipkartன் பிக் தீபாவளி விற்பனை முடிவடைந்துள்ள நிலையில் மங்களூரு வாடிக்கையாளர் ஒருவர் Flipkart மீது புகாரளித்ததை அடுத்து இந்நிறுவனம் ஆன்லைனில் பின்னடைவைச் சந்தித்தது. சின்மயா ரமணா என்பவர் Flipkartல் கேமிங் லேப்டாப்பை ஆர்டர் செய்திருந்தார், ஆனால் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக லேப்டாப்பிற்கு பதிலாக ஒரு பெரிய கல் மற்றும் சில இ-வேஸ்ட் கிடைத்ததுள்ளது.

இதை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் 'Flipkart இல் வாங்கியதற்கு தான் வருந்துவதாகவும்' மற்றவர்களும் அவரைப் போல "உதவியற்றவர்களாக" உணரப்படுவார்கள் என்பதால் இந்த இ-காமர்ஸ் தளத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டாம் என்றும் வலியுறுத்தி ட்வீட் செய்திருந்தார். இருப்பினும், அதற்கு மறுநாளே, Flipkartல் இருந்து தனது முழு பணத்தைத் திரும்பப்பெற்றுவிட்டதாகவும், மேலும் அவர் அந்த இ-காமர்ஸ் தளத்தில் தொடர்ந்து பொருட்கள் வாங்குவேன் என்றும் ரமணா தெரிவித்துள்ளார்.

கல் மற்றும் தனக்கு கிடைத்த கழிவுப்பொருட்களின் புகைப்படத்தோடு, லேப்டாப் அன்பாக்சிங் வீடியோவையும் தனது டீவீட்டில் இணைத்துள்ளார் சின்மயா ரமணா.

தீபாவளி சீசன் முழுவதும் பிளிப்கார்ட்டிலிருந்து வாடிக்கையாளர்கள் தவறான பேக்கேஜ்களைப் பெறுவதாக தொடர்ந்து பல புகார்களை அளித்ததையடுத்து Flipkart 'ஓப்பன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம்' என்பதை அறிமுகப்படுத்தியது. ஆனால் ரமணா ஆர்டர் செய்திருந்த பொருளுக்கு இந்த 'ஓப்பன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம்' ஆப்சன் கொடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். பேக்கேஜைப் Flipkartலிருந்து பெறும்போது, சரியான பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டதா என்பதை வாடிக்கையாளருக்குச் சரிபார்க்க இந்த 'open box delivery system' உதவுகிறது.

இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறுவது இதுதான் முதல் முறை என்று இல்லை.  சமீபகாலமாக இ-காமர்ஸ் தளங்கள் மீது இதுபோன்ற பல புகார்கள் பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள உட்னூரை சேர்ந்த பஞ்சாரி பீமன்னா என்ற நபர் ஜூன் மாதம் பிரபல இ-காமர்ஸ் தளத்தில் ரூ.6,100 விலையில் விவோ ஒய்83 மாடலின் ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருந்தார் ஆனால் அவருக்கு ஸ்மார்ட்போனுக்கு பதிலாக டிடர்ஜென்ட் சோப்பை அனுப்பிவைத்து அதிர்ச்சி தந்தது அந்த நிறுவனம்.

Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

மேலும் பீகாரில் உள்ள ஒருவர் ஆன்லைன் சில்லறை விற்பனையாளரிடமிருந்து ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஒரு கிலோ உருளைக்கிழங்கு கிடைத்ததாக அவர் பகிர்ந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Flipkart, Laptop, Tamil News, Trending