கையில் 3 ரூபாய்... கீழே கிடந்தது 40 ஆயிரம் ரூபாய்...! ஏழ்மையிலும் நேர்மை காட்டிய நபர்

கையில் 3 ரூபாய்... கீழே கிடந்தது 40 ஆயிரம் ரூபாய்...! ஏழ்மையிலும் நேர்மை காட்டிய நபர்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 7, 2019, 9:23 AM IST
  • Share this:
தனது ஊருக்குச் செல்லவே 7 ரூபாய் குறைவாக இருந்த நிலையில், கீழே 40 ஆயிரம் ரூபாய் கேட்பாரற்று கிடந்தும் அதனை உரியவரிடம் ஒப்படைத்து நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார் ஒருவர்.

மஹாராஷ்டிரா மாநிலம் சாதரா பகுதியை சேர்ந்தவர் தனஞ்ச் ஜெக்தலே. 54 வயதான இவர் தாகிவாடி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். ஊருக்குச் செல்ல 10 ரூபாய் தேவைப்பட அவரிடம் 3 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

குழப்பத்தில் பேருந்துக்காக வந்தவர் அப்போது சாலை ஓரம் கீழே ஒரு பண்டலாக ரூபாய் நோட்டுகள் கிடந்ததை பார்த்துள்ளார். அதனை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி தனஞ்ச் ஜெக்தலே, அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தபோது, பதற்றத்தில் இருந்த ஒருவர் அந்த பணம் தன்னுடையது என கூறினார். அந்த நபர் தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்காக இந்த பணத்தை எடுத்து வந்தபோது தவற விட்டது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் அவரிடம் ஜெக்தலே பணத்தை கொடுத்தார்.


ஜெக்தலேவின் நேர்மையால் நெகிழ்ந்து போன அந்த நபர், அவருக்கு ரூ.1,000 பரிசாக கொடுத்தார். ஆனால், அதனை வாங்க மறுத்த ஜெக்தலே, பஸ் டிக்கெட்டுக்காக தனக்கு வெறும் 7 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என அவரிடம் தெரிவித்தார்.

இறுதியில் அந்த 7 ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்ட ஜெக்தலே ஊருக்கு புறப்பட்டு சென்றார். இந்த செய்தியை அறிந்ததும் சாதரா பா.ஜ.க எம்.எல்.ஏ. உள்பட பலரும் ஜெக்தலேவை பாராட்டி அவருக்கு பரிசாக பணம் கொடுத்தபோதும் அதனை வாங்க மறுத்து விட்டார். “யாரோ ஒருவரிடம் இருந்து பணத்தை பெற்றால் மட்டும், ஒருவர் திருப்தி அடைய முடியாது என நினைக்கிறேன். நான் பரப்ப விரும்பும் ஒரே செய்தி, மக்கள் நேர்மையாக வாழ வேண்டும்” என்று ஜெக்தலே கூறியுள்ளார்.

First published: November 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்