ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

2 கைகளும், கால்களும் இல்லாமலே வண்டி ஓட்டும் நபர்... அசந்து போய் வேலை வழங்கிய ஆனந்த் மகேந்திரா!

2 கைகளும், கால்களும் இல்லாமலே வண்டி ஓட்டும் நபர்... அசந்து போய் வேலை வழங்கிய ஆனந்த் மகேந்திரா!

2 கைகளும், கால்களும் இல்லாத நபருக்கு வேலை வழங்கிய ஆனந்த் மகேந்திரா

2 கைகளும், கால்களும் இல்லாத நபருக்கு வேலை வழங்கிய ஆனந்த் மகேந்திரா

மாற்று திறனாளியான ராம் தனது குறைபாட்டை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல், வண்டி ஓட்டுவதை கற்று கொண்டுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பிறக்கும்போது உடலில் எந்தவொரு குறைபாடுகளும் இல்லாமல் பிறக்கும் பலர் இந்த வாழ்க்கையை பற்றி எப்போதும் வெறுமையாக நினைத்து கொள்வதுண்டு. எல்லா வித வசதிகளுடன் இருக்கும் நம்மில் பலர் எதுவுமே இல்லாத மக்களை பார்த்து மகிழ்ச்சி என்பது என்ன? என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இழப்பதற்கு எதுவும் இல்லை என்று வாழ்க்கையை சவாலுடன் கடந்து செல்லும் மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் டெல்லியை சேர்ந்த ராம் என்பவர்.

இவருக்கு பிறவிலேயே 2 கைகளும், கால்களும் சரிவர வளர்ச்சி பெறவில்லை. மாற்று திறனாளியான ராம் தனது குறைபாட்டை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல், வண்டி ஓட்டுவதை கற்று கொண்டுள்ளார். அவருக்கு தகுந்தாற்போல அந்த வண்டியை மாற்றியும் கொண்டுள்ளார். அதை பயன்படுத்தி தனக்கும், தன் வீட்டினருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சம்பாதித்து வருகிறார். ராமின் வாழ்க்கையை பற்றி ஒரு சிறிய வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோவில், அவர் மிகவும் மகிழ்ச்சி பொங்க தான் எப்படி வண்டி ஓட்டுகிறேன் என்பதை விவரித்துள்ளார். மேலும் அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் மற்றும் அவரது அப்பா உள்ளனர். இவர்களுக்காக தான் தினமும் வண்டியை செலுத்தி சம்பாதித்து வருவதாக ராம் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இவ்வாறு தான் வண்டியை ஓட்டி வருவதாக புன்னகைத்த முகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வந்துள்ளது. இதை எதர்ச்சையாக மகேந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா பார்த்துள்ளார். ராமின் அளவற்ற தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் பார்த்துவிட்டு அவருக்கு தனது நிறுவனத்தில் வேலை தருவதாக குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதவில், "இன்று எனது டைம் லைனில் இந்த வீடியோ வந்தது. இது எங்கிருந்து வந்தது, யார் இதை பகிர்ந்தார்கள் என்பதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், இந்த மனிதரின் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் அவரது குறைபாட்டை முழுவதுமாக மறைத்து விட்டதை எண்ணி நான் திகைத்து போயுள்ளேன். ராம் என்கிற இவரை எங்களது மகேந்திரா நிறுவனத்தில் பிசினஸ் அசோசியேட்டாக பணியமர்த்த விரும்புகிறேன்" என்று உணர்ச்சி பொங்க ஆனந்த் மகேந்திரா ட்வீட் செய்துள்ளார்.

Also read... புத்தாண்டை தனது க்யூட்டான டூடுலுடன் கொண்டாடும் கூகுள்...!

இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் ஆனந்த் மகேந்திராவை புகழ்ந்து வருகின்றனர். பலர் இந்த பதிவிற்கு ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், "தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்" என்று கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர், "இந்த மனிதர் எல்லோருக்கும் ஊக்கம் தருகிறார். அவரது எளிமையும், செயல்பாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Also read... 2021 ஆம் ஆண்டில் மக்களுக்கு கைகொடுத்த டாப் 10 ஆப்ஸ்!

வாழ்க்கையில் எதுவும் இல்லை என்றாலும் எப்படி அதை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற சிறந்த பாடத்தை இவரின் சிரிப்பு நமக்கு உணர்த்துகிறது.

First published:

Tags: Anand Mahindra, Trending