• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

ஓட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவுதும் அதை சமைப்பதும் போல வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

  • Share this:
    உத்தரபிரதேச மாநிலத்தில் ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை போலீசார் கைது செய்த பின்னர் அவர் ஜாமீனில் நேற்று வெளியே வந்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சாலையின் அருகே உள்ள ஓட்டலில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

    ஓட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவுதும் அதை சமைப்பதும் போல வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச மாநில போலீசார் விசாரணை நடத்தியதில் ஓட்டல் சமையல்காரர் தமீசுதீன் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமீசுதின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமீசுதின் ஜாமீனில் நேற்று வெளியே வந்தார். இந்த வீடியோவை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.



    கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கேட்டரிங் நபர் ஒருவர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜக்ரான் மன்ச் என்ற அமைப்பின் மீரட் பகுதி தலைவர் சச்சின் சிரோகி என்பவர் இந்த வைரல் வீடியோவில் உள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி விசாரித்தனர். இதனடிப்படையில் வைரலாக பரவி வரும் வீடியோவில் சப்பாத்தில் எச்சியில் துப்பிய வாலிபரை பர்தாபூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் நவுஷத், இவர் மீரட் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.



    வாலிபர் நவுஷத்திற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் அதன் முடிவுகள் அடிப்படையில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என வந்தால், கொரோனா பரப்பியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.



    இதனை தொடர்ந்து அசாம் மாநிலம் கௌகாத்தியில் பானிபூரி கடை நடத்தும் நபர் வேலை செய்துகொண்டே சிறிய கப்பில் சிறுநீர் கழித்து அதை பானிபூரி தொழிலுக்கு பயன்படுத்தும் நீரில் கலக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: