ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இதுதான் டைமிங்.. விராட் கோலிக்கு இப்படி ஒரு ரசிகரா? சரியாக அமைந்த திருமண தேதி!

இதுதான் டைமிங்.. விராட் கோலிக்கு இப்படி ஒரு ரசிகரா? சரியாக அமைந்த திருமண தேதி!

வைரலாகும் பதிவு

வைரலாகும் பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலி 71ஆவது சென்ச்சுரி அடிக்கும் வரையில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற அறிவிப்பை மைதானத்திலேயே வெளியிட்டிருந்தார் இந்த நபர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் அதுகுறித்த கேள்வியை கேட்டுப் பாருங்கள். சற்றும் தாமதிக்காமல், “கொஞ்சம் செட்டில் ஆகிட்டு கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேன்’’ என்று சொல்வார்கள். இந்த செட்டில் என்ற ஒற்றை வார்த்தையில் எண்ணற்ற இலக்குகள் ஒளிந்திருக்கும்.

பொதுவாக ஒரு வீடு வேண்டும், இன்னும் நல்ல ஊதியத்துடன் வேலை வேண்டும், கார் வேண்டும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக, தனக்கான ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அது நிறைவேறும் வரையில் திருமணம் செய்யாமல் காத்திருப்பது இயல்பான விஷயம் தான்.

ஆனால், யாரோ ஒருவரின் சாதனைக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருந்த நபர் குறித்து கேள்விபட்டது உண்டா? ஆம், கிரிக்கெட் வீரர் விராட் கோலி 71ஆவது சென்ச்சுரி அடிக்கும் வரையில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற அறிவிப்பை மைதானத்திலேயே வெளியிட்டிருந்தார் இந்த நபர்.

அமன் அகர்வால் என்னும் அந்த நபர் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சபதத்தை ஏற்றிருந்தார். தற்போது விராட் கோலி 74ஆவது சென்ச்சுரியை நிறைவு செய்துள்ள நிலையில், தான் திருமணம் செய்து கொண்ட விபரத்தை வெளியிட்டுள்ளார் அமான் அகர்வால்.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 70ஆவது சென்ச்சுரியை விராட் கோலி அடித்திருந்தார். ஆனால், அந்த ரசிகரின் வேண்டுதலுக்கு கிடைத்த புண்ணியமோ, என்னவோ இதற்கு அடுத்த ஒற்றை சென்ச்சுரியை விராட் கோலி அடிப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அண்மையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது 71ஆவது சென்ச்சுரியை கடந்தார் விராட் கோலி. இதையடுத்து, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை அமான் அகர்வால் முன்னெடுத்து வந்தார். சரியாக, அவருக்கு திருமணம் நடைபெறும் நாளில் 74ஆவது சென்ச்சுரியையே அடித்து விட்டார் விராட் கோலி.

இதுகுறித்த தகவலை டிவிட்டரில் அமான் அகர்வால் பகிர்ந்து கொண்டார். கடந்த ஜனவரி 16ஆம் தேதி வெளியான இந்தப் பதிவை இதுவரையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் லைக் செய்துள்ளனர். பலரும் அமான் அகர்வாலுக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து யூசர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “இந்தப் படத்தை நான் நினைவுகூர்த்து பார்க்கிறேன். உங்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இனி வரும் நாட்களில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்க வாழ்த்துக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவரின் கமெண்டில், “நம்பிக்கைக்கு மிஞ்சியது எதுவும் கிடையாது என்று நிரூபனம் ஆகியுள்ளது. மிகுந்த பாராட்டுக்கள் மற்றும் உங்கள் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்’’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Trending, Viral, Virat Kohli