முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தலை நிறைய ஷேவிங் கீரீம்... டென்னிஸ் பந்தை கேட்ச் பிடித்து விநோதமாக கின்னஸ் சாதனைப் படைத்த நபர்...

தலை நிறைய ஷேவிங் கீரீம்... டென்னிஸ் பந்தை கேட்ச் பிடித்து விநோதமாக கின்னஸ் சாதனைப் படைத்த நபர்...

விநோத சாதனைப் படைத்த நபர்

விநோத சாதனைப் படைத்த நபர்

தலையில் ஷேவிங் கீரீம் போட்டு அதில் பிடித்த பந்துகளைப் பிடித்தவரின் கின்னஸ் சாதனை வீடியோ வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaAustralia Australia Australia

தலையில் ஷேவிங் கீரீமை ஒரு தொப்பி போல் பூசிக்கொண்டு, அதில் டென்னிஸ் பந்தை பிடித்தவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விதவிதமாக சாதனைப் படைக்கச் சிலர் முயற்சி எடுப்பது உண்டு. அப்படி ஆஸ்திரேலியாவில் ஒருவர் செய்த விநோத முயற்சி, அவரை கின்னஸ் சாதனைப் படைப்பு வரை எடுத்துச் சென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்கார் லினாக். இவர் ஷேவ் செய்யும் ஜில்லட் கீரீமை சுமார் 250 கிராம் அளவில் எடுத்து தலையில் மலைபோல் போட்டுள்ளார். மேலும் சுவரில் டென்னிஸ் பந்துகளை வீசி அதைத் தலையில் உள்ள ஷேவிங் கீரீமை கொண்டு பிடித்துள்ளார். இதில் சாதனை என்னவென்றால், 30 நொடிகளில் எத்தனை பந்துகளை அப்படிப் பிடிக்கிறார் என்பது தான். அதும் பந்துகள் கண்டிப்பாக கீரீமில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.

இந்த முயற்சியில் 30 நொடிகளில் 12 பந்துகளைப் பிடித்துள்ளார். இதனால், இதுவரை இப்படி எடுக்கப்பட்ட இந்த முயற்சியில் அதிக பந்துகளைப் பிடித்தவர் என்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். அவரின் இந்த சாதனையின் வீடியோவை கின்னஸ் அமைப்பு அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Also Read : பொம்மை காரில் ஊர்வலம், அமர்க்களமான விருந்து... ஊரே வியக்க நாய்களுக்கு நடந்த திருமணம்..!

இது போன்ற 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அஷ்ரிதா ஃபர்மன் என்ற நபர் சுமார் 25 பந்துகளைத் தலையில் போட்ட ஷேவிங் கீரீம் கொண்டு பிடித்து சாதனைப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிலருக்கு விநோதமான காரியங்கள் செய்வதில் ஈர்ப்பு இருக்கும். ஆனால் இது போன்ற சாதனைகள் நகைச்சுவையாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

First published:

Tags: Australia, Guinness, Viral Video