ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சின்ன சின்ன அன்பில்தானே.. உதவி கேட்டவருக்கு 201 ரூபாய்! - கண்கலங்க வைக்கும் சம்பவம்.!

சின்ன சின்ன அன்பில்தானே.. உதவி கேட்டவருக்கு 201 ரூபாய்! - கண்கலங்க வைக்கும் சம்பவம்.!

கிரவுட் ஃபண்டிங்

கிரவுட் ஃபண்டிங்

Crowd Funding | பணத்தையே குறிக்கோளாக வைத்து இயங்கி வருபவர்கள் மத்தியில், இவருடைய நேர்மையைக் கண்டு நான் வியந்து போகிறேன் என்று கமல் தன்னுடைய பதிவில் அந்த நபரின் நேர்மையை பற்றி பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யாரை எப்போது எங்கே ஏமாற்றலாம் என்று உலகம் முழுவதிலுமே மோசடியாளர்களின் எண்ணிக்கைக்கு குறைவே இல்லை! அதிலும் போலியாக ஒரு சோக கதையை சொல்லி பணம் பெறுபவர்கள் மத்தியில் இப்படி ஒரு நபரா என்று அதிசயப்படும் வகையில் ஒரு நபரைப் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் அம்மா சென்டிமென்ட் உடன் இணைந்து, அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது என்று கூறும் அளவிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது!

முகம் தெரியாத நபர்களுக்கு உதவி செய்வது மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதை தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. உலகம் சுயநலமாக மாறி வந்தாலும், முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி என்றால் கை கொடுக்க பெரிய கூட்டமே இருக்கிறது. குறிப்பாக, மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கை மேற்கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். எத்தனையோ உயிர்கள், முகம் தெரியாத நபர்கள் வழங்கிய தொகையால் காப்பாற்றப்பட்டிருக்கிறது. தங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்த பின்னர் பலரும் அதை மறந்து விடுவோம். அப்படி உதவி செய்தவர்களில் ஒருவர் தான் கமல் சிங்.

யாரோ ஒருவரின் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதற்காக, கமல் சிங் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் 201 ரூபாய் அனுப்பியிருக்கிறார். பணம் அனுப்பியதோடு மட்டுமல்லாமல், “என்னால் முடிந்த சிறிய உதவி. அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்கின்ற ஒரு சிறிய செய்தியையும் அனுப்பியுள்ளார். பின்னர் அதை மறந்தும் போயிருக்கிறார்.

திடீரென்று, தனது போன்பே கணக்கில் 201 ரூபாய் வந்த செய்தியை பார்த்திருக்கிறார். இதைப் பற்றி தன்னுடைய லிங்க்டு-இன் கணக்கில் “என்னுடைய ஃபோன்ஃபே கணக்கில் 201 ரூபாய் கிரெடிட் ஆனது பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஆனால், யாரிடமிருந்து என்பது உடனே தெரியவில்லை. உடனே பணம் வந்த சாட் மெசேஜை திறந்து பார்த்தேன். அதில் நான் 1.5 வருடங்களுக்கு முன்பு ஒரு சமூக வலைத்தளத்தில் ஒரு கிரவுட் ஃபண்டிங் கோரிக்கைக்கு, ஒரு நபருக்கு என்னால் முடிந்த தொகையை அனுப்பினேன்.” என்பது தெரிந்தது.

Also Read : வில்லேஜ் விஞ்ஞானியான பஸ் ட்ரைவர்.. விண்டோ வைப்பருக்கு வாட்டர் பாட்டில் சிகிச்சை! வைரல் வீடியோ!

என்றோ வாங்கிய பணத்தை மறக்காமல் திருப்பி அனுப்பிய அந்த முகம் தெரியாத நபர் ஒரு பக்கம். பணம் பெற்றவுடன் எனக்கென்ன என்று அப்படியே இருக்காமல், கமல் அவருக்கு அம்மாவின் உடல்நலத்தைப் பற்றி விசாரித்து மெசேஜ் அனுப்பினார். அதற்கு அந்த நபரும், ‘அம்மா நலமாக இருக்கிறார், என்னுடைய வணிகமும் நன்றாக இருக்கிறது. அதனால் தான் எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்தவர்களிடம் பெற்ற பணத்தை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நன்றி’ என்று பதில் அனுப்பினார்.

'சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு', என்ற பாடல் வரிகள் நிஜம் என்பதற்கு ஏற்ப, ஒரு நபர் தனது அம்மாவுடன் இணைவதற்கு கமல் சின்க் செய்த சிறிய உதவி இன்று நெகிழ்ச்சியாக்கும் நிஜமாக மாறிய செய்தி இணையத்தில் வைரலாகப் பரவுகிறது.

பணத்தையே குறிக்கோளாக வைத்து இயங்கி வருபவர்கள் மத்தியில், இவருடைய நேர்மையைக் கண்டு நான் வியந்து போகிறேன் என்று கமல் தன்னுடைய பதிவில் அந்த நபரின் நேர்மையை பற்றி பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.

Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் யானையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

வாங்கிய தொகை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் போன்ற ஆட்கள் இருப்பதால்தான் கிரவுட் ஃபண்டிங் மூலம் பண உதவி வேண்டி வரும் கோரிக்கைகள் உண்மை என்பதை நம்ப முடிகிறது என்று பலரும் இவர்கள் இருவரையுமே பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending