மனித வாழ்வின் உன்னதமான ஒரு நிலை என்றால் அது காதலாக தான் இருக்க முடியும். காதல் கொண்ட இரு மனமும் எப்போதும் இளமையாக இருக்கும் என்று பலர் கூற கேட்டிருப்போம். பல படங்களில் காதலுக்காக தனது உயிரையே மாய்த்து கொண்ட காதல் ஜோடிகள் பலரை பார்த்திருப்போம். அதே போன்று எப்படிபட்டாவது தனது காதலை வாழ வைத்து விட வேண்டும் என்று காத்திருந்து தனது காதலை கரம்பிடித்தவர்களும் உண்டு. திருமணத்திற்கு பின் காதல் எல்லாம் மறந்துவிடும் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் காதலுக்கு திருமணம் என்பது ஒரு சிறிய சாட்சி மட்டுமே. எனவே காதலை எந்த விதத்திலும் தடுத்து விட முடியாது. திருமணத்திற்கு பிறகும் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவிற்கு அன்புடன் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்பவர் தனது மனைவியின் மீதுள்ள அதீத காதலால், காதல் சின்னமான 'தாஜ்மஹால்' போன்ற இன்னொன்றை கட்டி தந்துள்ளார்.
ஆம், நீங்கள் வாசிப்பது சரிதான். காதலுக்காக மும்தாஜ் நினைவாகவும் அவரின் மீது இருந்த அதீத காதலுக்காகவும் ஷாஜகான் எப்படி தாஜ்மஹாலை பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டினாரோ, அதே போன்று தற்போது இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஆனந்த் தன் மனைவிக்காக இந்த புது தாஜ்மஹாலை கட்டியுள்ளார். அதுவும் இவரின் 27 ஆண்டு கால காதல் வாழ்க்கையை பறைசாற்றும் விதமாக இது இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இந்த புது தாஜ்மஹாலை தனது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளார் ஆனந்த். இதை பற்றி கேட்டபோது இவர்களின் வாழ்க்கையில் நடந்த அழகிய காதல் கதையை பற்றி கூறினார். "எனது மனைவி மஞ்சுவை 1992 ஆம் ஆண்டு தான் சந்தித்தேன். இவர் என்னை விடவும் 4 வயது சிறியவர். நான் ஒரு கோச்சிங் வகுப்பில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தபோது மஞ்சு அங்கு சேர்ந்து படித்து வந்துள்ளார். அவருக்கு அப்போது டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.
மஞ்சு நன்றாக படிக்கும் மாணவி; அவரின் கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போன்று எனக்கு ஆங்கிலம் சரியாக வராது. மஞ்சுவுக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும். அவர் தான் எனக்கு ஆங்கிலம் நன்றாக பேச உதவினார். மேலும் எனது அப்பா உடல்நிலை சரியில்லாத போதும் வகுப்பு எடுக்க எனக்கு மஞ்சு உதவியுள்ளார். இப்படி தான் எங்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது" என்று ஆனந்த் தனது சுவாரஸ்யமான காதல் கதையை பகிர்ந்து கொண்டார்.
அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தன் மனைவியின் மீதிருந்த காதலை வெளிப்படுத்த தாஜ் மஹாலை போன்ற போன்றை வடிவமைத்து அவருக்கு பரிசாக வழங்க வேண்டும் என்று ஆனந்த் நினைத்துள்ளார். அதை செய்தும் காட்டியுள்ளார். மேலும் 27 வருடங்கள் ஆன பிறகும் தங்கள் இருவருக்குள் இருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. இப்போதும் நாங்கள் ஒருவருக்கும் ஒருவர் பலவற்றை கற்று தருவோம். என் மனைவி தான் என்னை பைக்கில் வைத்து அழைத்து செல்வார் என்று ஆனந்தம் பொங்க ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Also read... நெருப்பு பானி பூரி சாப்பிட வேண்டுமா? வைரலாகும் வீடியோ!
இவரின் இந்த புது தாஜ் மஹாலை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பகிர்ந்த 17 மணி நேரங்களில் சுமார் 5.4 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் லைக் செய்து வருகின்றனர். பலர் இவர்களை வாழ்த்தி கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.