காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கருப்புக்கொடி ஏற்றவந்த ராகுல் ஆதரவாளரால் பதற்றமடைந்த போலீஸ்!

அய்யலுச்சாமி எதற்காக வருகிறார் என்று தெரியாமல் கருப்புச்சட்டை அணிந்தவரை போலீசார் அலேக்காக தூக்கி சென்று பின்னர் விடுவித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: July 4, 2019, 9:51 PM IST
காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கருப்புக்கொடி ஏற்றவந்த ராகுல் ஆதரவாளரால் பதற்றமடைந்த போலீஸ்!
கருப்புச்சட்டை அணிந்து போராட்டம்
Web Desk | news18
Updated: July 4, 2019, 9:51 PM IST
தூத்துக்குடியில் கருப்புச் சட்டை அணிந்து வந்தவரை கைது செய்து ஆட்டோவிலேயே விசாரணை நடத்தியதில், ராகுல்காந்தி ராஜினாமாவை எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் என தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரைச் சேர்ந்தவர் அய்யலுச்சாமி. வழக்கறிஞரான இவர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மீது அதிக பற்று கொண்ட இவர் அடிக்கடி பல கோரிக்கைகளுக்கு செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்வது வாடிக்கை.


இந்நிலையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி நீடிக்க வலியுறுத்தியும், அவர் ராஜினாமா செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் ராஜினாமாவை வாபஸ் பெற வலியுறுத்தியும் கடம்பூரில் காமராஜர் சிலைக்கு எதிரேயுள்ள காங்கிரஸ் கட்சி கொடியில் கருப்புக்கொடி ஏற்றுவதற்காக, கருப்பு சட்டை அணிந்து வந்தார்.

அப்போது அப்பகுதியில் இருந்த கடம்பூர் போலீசார், அய்யலுச்சாமி கருப்பு சட்டையுடன் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவர் ஏதோ போராட்டம் செய்ய போகிறார் என்று நினைத்து, விரைந்து சென்று அய்யலுச்சாமியை பிடித்து இழுத்தனர்.

அவர் தான் எதற்காக வந்திருக்கிறார் என்று சொல்ல முயன்றும், போலீசார் அவரிடம் எதையும் கேட்காமல், காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Loading...

அய்யலுச்சாமியை ஆட்டோவில் ஏற்றி, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது ஆட்டோவில் இருந்த காவலர்கள் விசாரணை நடத்திய போது, அவர் போராட்டம் செய்ய வரவில்லை, கொடியேற்ற வந்துள்ளார் என்று தெரிந்ததும் போலீசார், காவல் நிலையத்திற்கு செல்லமால், எங்கு அவரை ஆட்டோவில் ஏற்றினார்களோ அதே பகுதியில் இறக்கி கொடியேற்ற சொன்னார்கள்.

இதை தொடர்ந்து அய்யலுச்சாமி காங்கிரஸ் கட்சி கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடியுடன் கருப்புக்கொடியை ஏற்றி, ராகுல்காந்தி தலைவராக தொடர வேண்டும் என்றும் கூறி முழக்கமிட்டார். எதற்காக வருகிறார் என்று தெரியாமல் கருப்புச்சட்டை அணிந்தவரை போலீசார் அலேக்காக தூக்கி சென்று பின்னர் விடுவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also watch: கடும் வறட்சியைச் சமாளிக்க செறிவூட்டும் கிணறுகள்! களத்தில் இறங்கிய கிராமத்துப் பெண்கள்

First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...