உலக சாதனைகள் பல இருந்தாலும், அவற்றில் பல நம்மை வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கும் இருக்கும். சில உலக சாதனைகள் விநோதமானதாக இருக்கும். அதே போன்று சில உலக சாதனைகள் விபரீதமானதாகவும் இருக்கும். பொதுவாக இது போன்ற உலக சாதனைகளை செய்ய அதிக முயற்சிகளை எடுப்பார்கள். இதில் சில விபரீத முயற்சிகளும் இருக்க கூடும். அந்த வகையில் ரஃபேல் ஜுக்னோ பிரிடி என்கிற நபர் வினோதமான முறையில் ஒரு சாதனையை செய்ய முயற்சித்துள்ளார்.
பொதுவாக உலக கின்னஸ் சாதனை நிறுவனமானது தனது சமூக ஊடக பக்கங்களில் சிறப்பான உலக சாதனை வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரஃபேல் ஜுக்னோ பிரிடி செய்த உலக சாதனை வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் இவர் இரண்டு புறங்களில் உள்ள பாராசூட்டில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் மீது நடந்து வந்து கின்னஸ் சாதனை செய்வதாக குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளனர்.
இப்படியெல்லாமா கேள்வி கேட்பாங்க? அமெரிக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ரஃபேல் ஒரு முனையில் உள்ள பாராசூட்டின் கயிற்றில் மெதுவாக நடக்க தொடங்குகிறார். அடுத்து மெல்ல நடந்து மறுமுனையில் உள்ள பாராசூட்டிற்கு வருவதற்கு முயற்சி செய்கிறார். இந்த உலக சாதனை மிகவும் கடினமானதாகவும், விபரீதமானதாகவும் உள்ள ஒன்றாகும். இருப்பினும் இவரது கடின உழைப்பின் காரணமாக இந்த அதிசய சாதனையை படைத்துள்ளார். இவரின் இந்த முயற்சி குறித்து கின்னஸ் உலக சாதனை பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் பிரேசிலில் உள்ள சாண்டா கேடரினாவில் உள்ள ப்ரியா கிராண்டேக்கு மேலே, 25-செமீ அகலம் கொண்ட ஸ்லாக்லைனை வெறுங்காலுடன் கடந்துள்ளார். இது உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் இரண்டு மடங்கு உயரமான இடமாகவும். அங்கு இருந்து தான் இவர் இந்த அதிசய சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த உலக சாதனையை குறித்து ரஃபேல் ஜுக்னோ பிரிடியிடம் கேட்டபோது சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
"மிதக்கின்ற மற்றும் சுதந்திரமான உணர்வு எப்போதும் எனது ஹைலைன் பயிற்சிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது, மேலும் இந்த உணர்வை நிலையான இயக்கத்தில் இருக்கும் இரண்டு பலூன்களுக்கு இடையில் கடந்து செல்வது போன்ற தெளிவான அனுபவத்தை எதுவும் கொண்டு வர முடியாது' என்றும் அவர் தெரிவித்து கொண்டார். இந்த வீடியோவை கின்னஸ் சாதனை பக்கத்தில் பகிர்ந்த உடன் பலர் ஆச்சரியமாக பார்க்க தொடங்கினர். இதை அவர்களின் கமெண்ட்ஸ் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 73,000 க்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர். அதே போன்று பலர் தங்களின் கருத்துக்களை ஷேர் செய்தும் வருகின்றனர். அதில் ஒருவர், "இது தான் சிறந்த சாதனை!" என்று கூறியுள்ளார். மற்றொரு நபர் "இதைப் பார்த்து என் கால்கள் நடுங்குகின்றன" என்று கருத்து தெரிவித்துள்ளார். இது போன்று பலரும் இவரின் சாதனை குறித்து பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.