Home /News /trend /

லாட்ஜில் தோழியுடன் தங்க மனைவியின் ஆதார் அட்டையை வழங்கிய ஜகஜால கில்லாடி!

லாட்ஜில் தோழியுடன் தங்க மனைவியின் ஆதார் அட்டையை வழங்கிய ஜகஜால கில்லாடி!

ஆதார்

ஆதார்

குஜராத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் (41 வயது) ஒருவர், தவறு செய்வதாக அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. அவர் நடத்தும் நிறுவனத்தில், மனைவியும் இயக்குனராக உள்ளார். கணவர் தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அவருக்கு சந்தேகம் வலுத்தது.

மேலும் படிக்கவும் ...
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி. அதாவது, திருடன் தன்னை அறியாமலேயே தான் செய்யும் தவறுக்கு ஆதாரமான விஷயங்களை விட்டு விடுவதன் மூலமாக, தானே மாட்டிக் கொள்வான் என்பது இதன் பொருள் ஆகும்.

குறிப்பாக, கட்டிய மனைவிக்கு உண்மையாக இல்லாமல், வேறொரு பெண்களுடன் தொடர்பில் இருக்கும் ஆண்கள், எப்படியும் ஒரு நாள் கையும், களவுமாக சிக்கி விடுவார்கள். அதிலும், தானே ஆப்பு எடுத்து சொருகிக் கொண்ட கதையாக, தான் வேறு ஒரு பெண்ணுடன் வந்திருப்பதை அவரது நடவடிக்கையே காட்டிக் கொடுத்து விட்டது. மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் (41 வயது) ஒருவர், தவறு செய்வதாக அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்தது. அவர் நடத்தும் நிறுவனத்தில், மனைவியும் இயக்குனராக உள்ளார். கணவர் தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அவருக்கு சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில், கணவரின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் காரில் அவர் ஜிபிஎஸ் கருவி பொருத்தியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்த கருவி பொருத்தப்பட்ட போதிலும், அப்போது முதல் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து வந்திருக்கிறார் அந்த ஜெகஜால கில்லாடி.

இந்நிலையில் தற்போது தொழில் விஷயமாக பெங்களூரு கிளம்பி செல்வதாக புறப்பட்டுச் சென்றார் அந்த தொழிலதிபர். ஆனால், காரில் உள்ள ஜிபிஎஸ் கருவியின் லொகேஷனை மனைவி செக் செய்த போது, அது புனேவில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தது. குறிப்பாக, புனேவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கார் நிறுத்தப்பட்டிருப்பதாக லொகேஷன் காண்பித்தது.

இதையடுத்து தொழில் அதிபரின் மனைவி அந்த ஹோட்டலுக்கு போன் செய்து, தனது கணவரின் பெயர் மற்றும் விவரங்களை கூறி விசாரித்துள்ளார். அப்போது தொழிலதிபர் தன்னுடைய மனைவியுடன் வந்து தங்கி இருப்பதாக ஹோட்டல் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Also read... தெருக்களில் இருந்து சிகரெட் துண்டுகளை எடுக்க காகங்களுக்கு பயிற்சி அளிக்கும் ஸ்வீடன் நிறுவனம்!

இதனால் அதிர்ந்து போன மனைவி உடனடியாக விரைந்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அங்கு தனது பெண் தோழியுடன் தொழிலதிபர் சென்று தங்கியது தெரியவந்தது.

மேலும் ஹோட்டலில் தங்குவதற்கு பெண் தோழிக்கு அடையாள அட்டையாக, தனது மனைவியின் ஆதார் அட்டையை அவர் வழங்கியிருக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதை எடுத்து இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவு (மோசடி செய்தல்) 419இன் கீழ் அந்த இருவருக்கும் எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் இருவரும் தற்போது வேறு இடத்துக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். இவர்களை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cheating

அடுத்த செய்தி