காதலிக்கும் பெண்ணுக்காக இப்படியா? மில்லியன் லைக்ஸை அள்ளிய காதலனின் சர்ப்ரைஸ் வீடியோ..!

காதலியை திரையரங்கிற்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் கொடுத்த காதலனின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

காதலிக்கும் பெண்ணுக்காக இப்படியா? மில்லியன் லைக்ஸை அள்ளிய காதலனின் சர்ப்ரைஸ் வீடியோ..!
வீடியோ காட்சி
  • Share this:
லாக்டவுன் விரக்தியில் இருந்த காதலியின் மனஉளைச்சலை போக்க காதலன் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ இணையத்தில் அனைவரது மனதையும் வென்றுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அனைவரது லைப்ஸ்டைலையும் மாற்றிப் போட்டுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு காரணமாக பார்க், ரெஸ்டராண்ட், திரையரங்கு என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

ஆனால் ஊரடங்கின் போதும் தனது காதலியை திரையரங்கிற்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் கொடுத்த காதலனின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் வருபவர் தனது காதலியிடம் வா தியேட்டருக்கு போகலாம் என்கிறார். ஆனால் லாக்டவுனில் எப்படி முடியும் என்று அந்த பெண் கேட்க டிக்கெட் என்று அச்சிட்ட பேப்பரை அவரிடம் கொடுக்கிறார்.


பின் அவரது வீட்டிற்குள் அழைத்து அங்கு திரையரங்கம் போன்றே செட் போட்டுள்ளார். முகப்பில் உள்ள ஒருவர் அவருக்கு பாப்கார்ன், குளிர்பானம் கொடுக்கிறார். மால்களில் உள்ளது போல் ஸ்கரின் 1, ஸ்கிரின் 2 என்று இருக்க தனக்கான அறைக்குள் செல்கிறார். அங்கு தியேட்டரில் இருப்பது போன்ற விளக்குகளுடன் சோபா போடப்பட்டு டிவியல் அவருக்கு பிடித்த படம் திரையிடப்பட்டது.
@michaelandmarisaSuprised Marisa with an at home date night 🎥 🍿 💖 ##foru ##foryoupage ##fyp ##datenight ##bedroomcheck ##couple ##howto ##diy♬ original sound - michaelandmarisa

காதலிக்காக வீட்டையே சினிமா தியேட்டராக மாற்றிய காதலனின் இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. பலர் இந்த வீடியோவிற்கு தங்களது கமெண்டை பதிவு செய்து வருகின்றனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading