Home /News /trend /

சூப்பர் கூல்... கோடை வெயிலை சமாளிக்க ரிக்‌ஷா ஓட்டுநரின் அசத்தல் ஐடியா.!

சூப்பர் கூல்... கோடை வெயிலை சமாளிக்க ரிக்‌ஷா ஓட்டுநரின் அசத்தல் ஐடியா.!

Rickshaw

Rickshaw

Trending | சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள நபர் ஒருவர் தனது ரிக்‌ஷாவையே மினி ரூப் டாப் கார்டனாக மாற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏப்ரல் மாத தொடக்கம் கொளுத்தும் வெப்பத்தையும் கூடவே அழைத்து வந்திருக்கிறது. இளநீர், பதநீர், கரும்பு ஜூஸ், தர்ப்பூசணி என சாலையோரம் இருக்கும் கடைகள் முன்பெல்லாம் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து தப்பிக்க, என்னவெல்லாம் வழி இருக்கிறது என மக்கள் இணையங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரும்பாலானோர் கொரோனாவுக்கு கொடுத்தது போல் கோடை காலத்திற்கும் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து வருகின்றனர். ஆனால் வேலை எதுவாக இருந்தாலும், அந்த இடத்தை நமது கற்பனை மற்றும் செயல் திறன் மூலம் பைசா செலவில்லாமல் சிம்லா போல் குளிர்ச்சியாக்கலாம் என்பதை ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

மக்கள் அனைவரும் வெயிலில் வெளியே போக வேண்டும் என்றாலே மிரண்டு போகும் அளவிற்கு கொடுமையாக வெயில் கொளுத்துகிறது. ஆனால் எல்லாருக்குமே வொர்க் ப்ரம் ஹோம் வேலையோ, ஏசி கேபினுக்குள் குளு, குளுவென பணியாற்றும் வாய்ப்போ கிடைப்பது கிடையாது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் பல மணி நேரம் வாட்டி வதைக்கும் வெயிலில் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், புத்திசாலி நபர்கள் வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஸ்பெஷல் ஐடியாவை உருவாக்கிக் கொள்கின்றனனர்.கடந்த சில நாட்களாகவே ஒரு நபர் தனது மொபைல் மினி கார்டனில் அல்லது ஒரு ரிக்‌ஷாவில் அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொளுத்தும் கோடைக் காலம் என்பதால், ரிக்‌ஷா ஓட்டுநர் தனது ரிக்‌ஷாவின் கூரையில் புல்லை வளர்த்து, வெப்பத்தைத் தணிக்க ரிக்‌ஷாவை சுற்றிலும் சில பாட்களில் செடிகளை வைத்து அழகுபடுத்தியுள்ளார்.

Also Read : சாப்பிட்டதால் சாதனை படைத்த பிரிட்டன் பெண் - வைரல் வீடியோ!

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், கிரீன் பெல்ட் மற்றும் ரோடு இன்ஸ்டிடியூட் தலைவருமான எரிக் சோல்ஹெய்ம் ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. அதில், தனது ரிக்‌ஷா டாப்பை புல் மற்றும் செடிகளால் மூடி, கொளுத்தும் வெயிலில் தன்னையும், தனது ஆட்டோவில் சவாரிக்கு வருபவர்களையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறார்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எரிக் "இந்த இந்திய மனிதர் வெயிலிலும் குளிர்ச்சியாக இருக்க ரிக்ஷாவிற்கு மேல் புல் வளர்த்துள்ளார். உண்மையில் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : மகனுக்காக தந்தை செய்த தரமான செயல்

ரிக்ஷாக்காரரின் படைப்பாற்றல் ட்விட்டரில் கிட்டத்தட்ட 21,000 லைக்குகளைப் பெற்றதோடு, அதே நேரத்தில் 2,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. ரிக்‌ஷா ஓட்டுநரின் புதுமையான ஐடியாவை ஏராளமான நபர்கள் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். ட்விட்டர்வாசி ஒருவர், புதுமைக்கு பட்டங்கள் தேவையில்லை, உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் பட்டப்படிப்பைக் குறைக்க அபார முயற்சி செய்திருக்கிறார், வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

ரிக்‌ஷாவையே பசுமையான கார்டனாக மாற்றிய நபருக்கு விஜபிக்கள் முதல் சாமானிய மக்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Rickshaw driver, Trending

அடுத்த செய்தி