முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பொய்யான காரணம் கூறி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு போட்ட ஊழியர்..! - குடும்ப புகைப்படத்தால் மாட்டிக்கொண்ட பரிதாபம்!

பொய்யான காரணம் கூறி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு போட்ட ஊழியர்..! - குடும்ப புகைப்படத்தால் மாட்டிக்கொண்ட பரிதாபம்!

குடும்பத்துடன் ஃபெரேன்க் சுமேகி

குடும்பத்துடன் ஃபெரேன்க் சுமேகி

நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்த ஊழியர், தன்னுடைய புகைப்படத்தை ஃபோட்டோஷாப் செய்திருக்கிறார். இதனை அறிந்த அதிகாரிகள் அவருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பணியிலிருக்கும் போது விபத்து ஏற்பட்டால் அதற்கு நஷ்டஈடு வழங்குவது நிறுவனத்தின் பொறுப்பு. பெரும்பாலும் எல்லா நாடுகளிலுமே இதற்கான சட்டம் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் இந்த சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி நிறுவனத்தை ஏமாற்ற பார்ப்பார்கள். அதே போல ஒரு சம்பவம்தான் சமீபத்தில் நடந்திருக்கிறது. ஒரு ஊழியர், பணியில் இருக்கும்பொழுது பாதிப்பு ஏற்பட்டது என்ற காரணத்தால் இனிமேல் தன்னால் வேலைக்கு வேலை செய்ய முடியாது என்று நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கோரி இருக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது பொய் என்பதை நிறுவனம் கண்டறிந்து விட்டது. ஒரே ஒரு புகைப்படத்தால் அவர் சொன்ன பொய் அம்பலமாகிவிட்டது. என்ன நடந்தது என்று இங்கே பார்க்கலாம்.

ஒரு செஃப், ரெஸ்டாரன்ட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தால், நிறுவனத்திடம் இந்திய ரூபாய் மதிப்பில் 22 கோடி (2.2 மில்லியன் யூரோ) கிளைம் செய்திருந்தார்.ஃபெரேன்க் சுமேகி என்ற ஊழியர் ஒருவர், ஹீத்ரோ விமானநிலையத்தில் பணியாற்றி வந்திருந்தார். அவர் அங்கு வேலை செய்த போது,  ட்ரேக்களை எடுக்கும்போது, முதுகில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும், அதனால் அவருக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், அதனால் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அவரால் கிரட்சுகள் இல்லாமல் நடக்க முடியவில்லை என்பதையும் காரணம் காட்டி, நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால், இவர் வசிப்பது ஒரு நாடு ஆனால் கிளைம் கோரியிருப்பதோ மற்றொரு நாட்டிலிருந்து. இங்கிலாந்தில் உள்ள வொர்க் மற்றும் பென்ஷன் டிபார்ட்மென்ட், இந்த கிளைமை பிராசஸ் செய்யும் போது, இவர் எங்கு வசிக்கிறார் என்பது பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த, தன்னுடைய வீட்டின் முகப்பில் நின்றபடி ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கோரியது.

Read More : கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்த ஒரு நாயின் சுவாரஸ்ய கதை..!

அந்த செஃப்பும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தில், பென்ஷன் துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு தீர்வு கிடைத்தது. நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்த ஊழியர், தன்னுடைய புகைப்படத்தை ஃபோட்டோஷாப் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், அவரது வீட்டின் புகைப்படம் கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் பதிவாகி உள்ளது. அதில் தனது புகைப்படத்தை சேர்த்து, போலியாக ஆவணத்தை அனுப்பியுள்ளார். போட்டோ எடிட் செய்தவர் அதை சரியாக செய்திருக்கலாம். ஆனால், அந்த புகைப்படத்தில் கூகுள் நிறுவனத்தின் லோகோ இருப்பதை மறந்து விட்டு அப்படியே அனுப்பி இருக்கிறார்.

இந்த ஊழியருக்கு 49 வயதாகிறது. இந்த வழக்கை நடத்திய இங்கிலாந்து அடிப்படையிலான வழக்கறிஞர்கள், இவருக்கு ஏற்பட்ட காயம் உண்மை தான், ஆனால் இவர் அனுப்பிய புகைப்படம் போலி என்று கூறியுள்ளனர். மேலும், தனது குடும்பத்துடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு மாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கூறியது பொய் என்பதை அறிந்த நீதிமன்றம், இவருக்கு £75,000 அபராதம் விதித்துள்ளது.

First published:

Tags: Trending News, Viral