Home /News /trend /

நடுவானத்தில் பறக்கும் விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற இளைஞர்! ஷாக் வீடியோ

நடுவானத்தில் பறக்கும் விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற இளைஞர்! ஷாக் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, விமான பயணி ஒருவர் திடீரென்று தான் விமான இருக்கையின் கண்ணாடியை உதைப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் காணப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
குழாயடி சண்டை, நடுரோட்டில் சண்டை, நண்பர்களுடன் சண்டை, வகுப்பு, குடும்பத்தில் அடிதடி சண்டை என்று பலவிதமான சண்டைகளை நேரிலேயே பார்த்திருப்போம். சண்டை சச்சரவுக்கு காரணங்களுக்கு குறைவே இல்லை. ஆனால் நடு வானத்தில் பறக்கும் விமானத்தில் சண்டை நடந்தது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு சண்டை சமீபத்தில் நடந்தது! அந்த சண்டையை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடுவானத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைக்க ஒரு நபர் முயற்சி செய்துள்ளார். அப்போது சண்டை துவங்கியுள்ளது இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு சென்ற ஒரு சர்வதேச விமானத்தில் இந்த சண்டை நடந்திருக்கிறது. விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, விமான பயணி ஒருவர் திடீரென்று தான் விமான இருக்கையின் கண்ணாடியை உதைப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் காணப்பட்டன.

வீடியோவில் ஒரு இளைஞரை சுற்றி விமான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பேசிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று அவர் விமானத்தின் கண்ணாடி ஜன்னலை எட்டி உதைத்தார். அப்போது மற்றொரு விமான அலுவலர் அதைத் தடுப்பது போலவும், இன்னொருவர் அவரிடம் ‘இப்படி எல்லாம் செய்யக்கூடாது’ என்று எச்சரிப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

Read More : திருடனிடமிருந்து கைக்குழந்தையுடன் தாயைக் காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்.. வீர செயலுக்கு இணையத்தில் குவியும் பாராட்டு.. வைரல் வீடியோ இதோ!


அவர் ஏன் திடீரென்று விமான இருக்கையை தாக்கத் துவங்கினார், உதைக்கத் துவங்கினார் என்பது பற்றிய விவரங்களும் அந்த வீடியோ காட்சியில் இல்லை. ஆனால், அதைப்பற்றிய விவரங்கள், செய்திகளில் வெளியாகின. விமானத்தின் கண்ணாடியை உடைக்கும் செயலில் ஈடுபட்ட விமான பயணி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

விமானம் பறந்து கொண்டிருக்கும் பொழுது அவரால் நமாஸ் செய்ய முடியவில்லை என்றும், தொழ முயற்சித்த போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பதால் அது பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்று அறிக்கைகள் கூறியுள்ளன. ஆனால், வெளியான சில நொடிகள் உள்ள வீடியோவில் அவர் தடுக்கப்பட்டது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை. அதுமட்டுமில்லாமல், தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை விமானக் குழு சமாதானம் செய்த காட்சிகள் வீடியோவில் உள்ளன.

டிவிட்டரில் பகிரப்பட்ட வீடியோவின் இணைப்பு இங்கே. இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.



இதைத் தொடர்ந்து, அந்த நபர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து செய்தி வெளியானது. வெளியான அறிக்கையின்படி துபாயில் விமானம் தரை இறங்கியதை அடுத்து, விமானத்தில் சண்டை போட்ட அந்த பயணி போலீஸ் அதிகாரிகளின் கஸ்டடிக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் மீண்டும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி