ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அம்மாவை விட பாசமாக பார்த்து கொண்ட பணிப்பெண்... 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த உணர்ச்சிபூர்வமான சந்திப்பு!

அம்மாவை விட பாசமாக பார்த்து கொண்ட பணிப்பெண்... 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த உணர்ச்சிபூர்வமான சந்திப்பு!

தன்னை வளர்த்தவரை தேடி நீண்ட பயணம் - 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த உணர்ச்சிபூர்வமான சந்திப்பு!

தன்னை வளர்த்தவரை தேடி நீண்ட பயணம் - 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த உணர்ச்சிபூர்வமான சந்திப்பு!

ஜுவானிட்டோ ஜான்ஸன் என்பவர் ஸ்பெயின் நாட்டில் இருந்து பொலிவியா நாட்டிற்கு பயணம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, IndiaBoliviaBoliviaBolivia

  நீண்ட காலம் முன்பு பிரிந்தவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்றும் பலரும் ஏங்குவதுண்டு. நண்பர்கள், பக்கத்து வீட்டினர், பள்ளியில் ஆரம்ப வகுப்பில் ஒன்றாக படித்தவர், உறவினர் என்று இளம் வயதிலேயே பலரையும் பிரிந்திருக்கும் அனுபவம் எல்லாருக்குமே இருக்கும். அதிலும், குறிப்பாக, குழந்தைப்பருவத்தில் தன்னிடம் அதிகமாக அன்பும் பாசமும் காட்டி வளர்த்தவர்களிடம் அதிக ஒட்டுதல் இருக்கும். பலர் வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள தனியே ஆட்கள் நியமிக்கும் பழக்கம் உண்டு. அம்மாவிடம் இருப்பதை விட, இவர்களிடம் தான் அதிக ஒட்டுதலாக இருப்பார்கள். குழந்தையில் தன்னை வளர்த்தவரை 45 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த செய்தி நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது.

  இளம் வயதில் பிரிந்த நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கிறார் என்றால் நீங்கள் தேடிப் போகலாம் அல்லது உங்கள் உறவினர் பிறந்துவிட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு வேறு இடத்தில் இருக்கிறார் அல்லது அவரை கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள் கிடைத்திருக்கிறது என்றால் அதை தேடிப் போவார்கள். அதேபோல பிரிந்து சென்ற காதலியை காதலனை தேடி சென்றவர்களும் உண்டு. காணாமல் போன பிள்ளை பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நெகிழ்ச்சியான சம்பவங்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் ஒரு குழந்தை பருவத்தில் தன்னை கண்ணும் கருத்துமாக வளர்த்த ஒரு பெண்மணியைத் தேடி ஒரு 8000 கிலோ மீட்டர் பயணித்த பயணம் செய்த நபர்கள் பற்றிய கதைகள் மிகவும் குறைவுதான்.

  பிரிந்தவர் ஒன்று சேர்ந்தாலே அது அதீத மகிழ்ச்சியாகவும், மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும் மனம் நெகிழும்படியாகவும் இருக்கும். தன்னை குழந்தையாக இருக்கும் பொழுது வளர்த்த தன்னுடைய நானியை தேடி 8000 கிலோமீட்டர் பயணம் செய்து அவரை சந்தித்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

  ஜுவானிட்டோ ஜான்ஸன் என்பவர் ஸ்பெயின் நாட்டில் இருந்து பொலிவியா நாட்டிற்கு பயணம் செய்திருக்கிறார். பயணம் செய்பவர்களுக்கு நாடு விட்டு நாடு செல்வது கண்டம் விட்டு கண்டம் செல்வது, வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்து கொண்டே இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஜான்சன் 8000 கிலோமீட்டர் பயணம் செய்ததற்கான காரணம், சிறு வயதில் தன்னை வளர்த்த பெண்மணியை காண்பதற்கு என்பது ஆச்சரியப்படுத்துகிறது.

  ‘ஃபைண்டிங் ஆனா’ என்ற தலைப்புடன் ஒரு ட்விட்டர் கணக்கு, குழந்தையாக ஜான்சனைப் பார்த்துக் கொண்ட ஆனாவைப் பற்றிய வீடியோவை பதிவு செய்துள்ளது. 45 ஆண்டுகள் பிரிந்த பிறகும், தன்னை வளர்த்த ஆனாவை பார்ப்பதற்காக ஜான்சன் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் ஆனா தன்னுடைய சொந்த மகனைப் போலவே அன்பும் பாசமும் காட்டி வளர்த்து இருக்கிறார் என்று அந்த வீடியோவில் பகிரப்பட்டு இருந்தது.

  ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை 1.76 லட்சம் நபர்கள் பார்த்து இருக்கின்றனர்.

  Read More: ஸ்பூனில் சாப்பிட சொன்னா ஸ்பூனையே சாப்பிட்டு வந்த நபர் - அறுவை சிகிச்சை மூலமாக அகற்றம்!

  அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 1000 நபர்கள் ரீட்வீட் செய்து இருக்கிறார்கள். இந்த வீடியோ 8000 லைக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. குழந்தை பருவத்தில் ஆனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஜான்சன் காட்டும் பொழுது நெகிழும்படி இருக்கிறது. ஆனா, தனது குடும்பத்துடன் தற்போது பொலீவியாவில் வசித்து வருகிறார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Viral News, Viral Video