• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஹைதராபாத்தில் இருந்து லடாக் வரை ஸ்கூட்டரில் சாலை பயணம் - 27 நாட்களில் நிறைவு செய்த நபர்!

ஹைதராபாத்தில் இருந்து லடாக் வரை ஸ்கூட்டரில் சாலை பயணம் - 27 நாட்களில் நிறைவு செய்த நபர்!

ஹைதராபாத்தில் இருந்து லடாக் வரை ஸ்கூட்டரில் சாலை பயணம்

ஹைதராபாத்தில் இருந்து லடாக் வரை ஸ்கூட்டரில் சாலை பயணம்

மேலும் திலீப் குமார் இந்த பயணத்தின் போது எந்த ஒரு முழு நேர வேலையும் செய்யவில்லை என்றும், அவ்வாறு செய்வது தனது பயண இலட்சியத்தை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.

  • Share this:
ஜப் தக் ஹை ஜான்(Jab Tak Hai Jaan) மற்றும் 3 இடியட்ஸ் (3 idiots) போன்ற பல பாலிவுட் திரைப்படங்கள் லடாக்கின் அழகை காட்டியுள்ளன. இதனால் நாட்டில் உள்ள பல சுற்றுலா பயணிகள் வட இந்தியாவில் உள்ள லடாக்கை பார்க்க விரும்புகிறார்கள். இந்த நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த திலீப் குமார் என்ற நபர் லடாக் பயணத்தை வித்தியாசமாக மேற்கொண்டுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதல் அறிக்கையின்படி, திலீப் குமார் தனது ஸ்கூட்டரில் ஹைதராபாத்தில் இருந்து லடாக் வரை செல்ல முடிவு செய்தார். 30 வயதான அவர் தனது சொந்த ஊரிலிருந்து லாடாக் செல்லும் கடினமான பயணத்தை தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் மேற்கொண்டார். திலீப் குமார் தனது பயணத்தை செப்டம்பர் 8ம் தேதி தொடங்கியதாகவும், தினமும் எட்டு முதல் பத்து மணிநேரம் பயணித்து, 27 நாட்களில் பயணத்தை நிறைவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் திலீப் குமார் இந்த பயணத்தின் போது எந்த ஒரு முழு நேர வேலையும் செய்யவில்லை என்றும், அவ்வாறு செய்வது தனது பயண இலட்சியத்தை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். பெரிய வாகனங்கள் அதிகமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக கவனத்துடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் மற்றும் அத்தகைய சாலைகளில் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு கவனத்துடன் என்ற திலீப், நாக்பூர் அருகே ஒரு விபத்தை சந்தித்ததாகவும், அது அவரை அதிகம் காயப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார், ஆனால் அப்போது அவரது ஸ்கூட்டர் பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார். பின்னர் பழுதுபார்த்து விட்டு மீண்டும் தனது பயணிப்பதை தொடங்கியுள்ளார். லாடக் பயணத்தின் மீதான திலீப் குமாரின் ஈடுபாடே அவரை இத்தகைய கடினமான பயணத்தை மேற்கொள்ள தூண்டியது எனவும் கூறலாம்.

திலீப் குமார் தனது பயணத்தின் மிகவும் கடினமான பகுதியை பற்றி கூறுகையில், த்சோ மோரிரி(Tso Moriri lake) ஏரிக்கு அருகில் 60 கிலோமீட்டர் தூரம் முற்றிலும் ஆஃப் ரைடிங் செய்ததாக கூறினார். மேலும் பயணத்தின் போது அவர் அடையக் கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர் என்றும் கூறினார். பொதுவாக தினமும் சுமார் 12 மணிநேரம் பயணிக்க முடியும் என்றும், ஆனால் இமயமலைத் தொடரை அடைந்ததும் ஒரு நாளில் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் முதல் 250 கிலோமீட்டர் வரை மட்டுமே கடக்க முடிந்தது என்றும் திலீப் குமார் விளக்கியுள்ளார்.

Also read... நிறைய பெண்கள் இருப்பாங்கன்னு சொன்னீங்க.. ஏமாந்துபோன இளைஞர் டேட்டிங் வெப்சைட் மீது வழக்கு

இரவில் பெட்ரோல் பங்க், சுங்கச்சாவடிகள் அல்லது கிராமங்களில் தங்கியதாகும், அறிமுகமில்லாத இடத்தில் தனியாக பயணம் செய்தாகவும், தான் ஒருபோதும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தங்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் அவர் தனது பயணத்தின் போது பல்வேறு பயண குழுக்களை அடிக்கடி சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: