Home /News /trend /

விமானத்தில் பிரேக்ஃபாஸ்ட் கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

விமானத்தில் பிரேக்ஃபாஸ்ட் கொண்டு சென்ற பயணிக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

விமானம்

விமானம்

McDonald's Breakfast | சமீபத்தில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் பிரேக்ஃபாஸ்ட்டை விமானத்தில் கொண்டு சென்ற ஒரு நபருக்கு ₹2,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேர விமான பயணத்தில் விமான நிறுவனமே உணவுகளை வழங்கும். விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே எந்தவிதமான உணவுகள் தேவை என்பதை தேர்வு செய்யும் விருப்பமும் இருக்கிறது. ஆனால் குறுகிய பயணத்தில் அந்த சேவைகள் வழங்கப்படுவதில்லை. எனவே பயணிகள் தங்கள் விரும்பும் உணவை கையோடு கொண்டு செல்வார்கள்.

அதாவது, ரயில் பயணம் போலவே விமான பயணத்திலும் பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச் அல்லது தின்பண்டங்கள் ஆகியவற்றை, வீட்டில் செய்த உணவு அல்லது உணவகங்களில் வாங்கியதோ, கொண்டு செல்லும் வழக்கம் இருந்து வருகிறது. சமீபத்தில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் பிரேக்ஃபாஸ்ட்டை விமானத்தில் கொண்டு சென்ற ஒரு நபருக்கு ₹2,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக செல்லும் பொழுது வீட்டில் இருந்து உணவு கொண்டு செல்வதற்கு நேரம் இல்லை என்றால் நாம் முதலில் தேர்வு செய்வது பக்கத்தில் என்ன உணவகம் அல்லது ஃபாஸ்ட் ஃபுட் ஜாயின்ட் தான். பர்கர்களுக்கு மிகவும் பிரபலமான மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் காலை உணவு விருப்பங்களாக பர்கர் மற்றும் wrapகளை வழங்குகிறது. அந்த பிரேக்ஃபாஸ்ட்டிக் வாங்கிக் கொண்டு பாலியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நபர் விமானப் பயணம் மேற்கொண்டார். அந்த உணவின் விலை சில நூறு ரூபாய்கள் தான் இருக்கும். ஆனால் விமானத்தில் கொண்டு சென்றதால் அவர் காலை உணவுக்காக ₹2,00,000 செலவு செய்திருக்கிறார்.ஒவ்வொரு நாடும் ஒரு சில உணவுகளை தடை செய்துள்ளது. அதேபோல ஒருசில உணவுகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பலருக்கும் இதை பற்றிய விவரங்கள் முழுதாகத் தெரிவதில்லை. மெக்டொனால்ட் உணவுடன் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிய நபரின் பையை செக்யூரிட்டியில் இருக்கும் மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. உடனடியாக அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். மெக்டொனால்ட் வழங்கிய பிரேக் ஃபாஸ்ட் உணவில் இரண்டு முட்டைகள் மற்றும் ஒரு பீஃப் ஸாஸேஜ் மஃபின்ஸ் மற்றும் ஒரு ஹாம் க்ரோசாய்ன்ட் ஆகியவை இருந்தன. பாலியில் விமானம் ஏறிய பொழுது அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு தவறான உணவைப் பற்றிய தகவலை வழங்கியதாக அபராதம் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டது.

Also Read : கை குழந்தையை டிராக்டர் முன் வீசிய தாய்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

விமான நிலைய அதிகாரிகளால் இந்திய மதிப்பில் ரூபாயில் கிட்டத்தட்ட ₹2,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தவறான அல்லது திசை திருப்பும் நோக்கத்தில் தகவல் வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவின் விவசாயத் துறை அமைச்சரான முர்ரே வாட் இந்தத் தகவலை கேள்விப்பட்டு இதுதான் உலகின் மிக விலை அதிகமான மெக்டொனால்ட் உணவு என்று தெரிவித்திருந்தார்.

Also Read : சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரது கவனத்தை ஈர்த்த செல்லக்குட்டி.. போர் புகையில் சதுரங்க போர் கற்ற சிறுமி!

அதுமட்டுமில்லாமல் விதிமுறைகளை பின்பற்றாத யாராக இருந்தாலும் அவர்களுக்கு கருணை காட்டப்பட மாட்டாது. எல்லா பயணிகளும் தாங்கள் செல்லும் நாடு அதற்கான விதிமுறைகள் ஆகியவற்றை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும், அதை பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். விமானத்தில் ஏறும் பொழுது இந்த உணவு இருப்பதாக அவர் விமான நிலைய அதிகாரியிடம் தெரிவிக்காதது தான் இதற்குக் காரணம் ஒரு சிறிய தவறினால் ₹2,00,000 அபராதம் செலுத்த வேண்டி நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Australia, Flight, Trending

அடுத்த செய்தி