Home » News » Trend

குடை பிடித்து சமூக இடைவெளியுடன் எப்படி மது வாங்குவது...? பயிற்சி எடுத்த குடிமகன் - வீடியோ

ஒலி பெருக்கி அமைத்து ஒருவருக்கு எத்தனை குவாட்டர் பாட்டில்கள் வழங்கப்படும், குடை பிடித்து வரவேண்டும் என அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடை பிடித்து சமூக இடைவெளியுடன் எப்படி மது வாங்குவது...? பயிற்சி எடுத்த குடிமகன் - வீடியோ
News 18
  • News18
  • Last Updated: May 6, 2020, 10:13 PM IST
  • Share this:
திருப்பூரில் குடை பிடித்து சமூக இடைவெளியுடன் எப்படி மது வாங்குவது என குடிமகன் ஒருவர் ட்ரையல் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் போது குடை பிடித்து வந்தால் தான் மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தடுப்புகள் அமைத்து 6 அடிக்கு ஒருவர் நிற்பது போல் கட்டைகள் கட்டி வட்டம் வரைந்து தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஒலி பெருக்கி அமைத்து ஒருவருக்கு எத்தனை குவாட்டர் பாட்டில்கள் வழங்கப்படும், குடை பிடித்து வரவேண்டும் என அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




இதனிடையே, மதுப்பிரியர் ஒருவர் குடை பிடித்து சமூக இடைவெளியுடன் ஒவ்வொரு தடுப்பதாக தாண்டி மதுவை எப்படி வாங்குவது என முன்னோடட்ம் பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

படிக்க: டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் விற்கப்படவுள்ள மதுபானங்களின் விலைப்பட்டியல் வெளியீடு - முழு பட்டியல்











First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading