முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / அவ்ளோ லவ்.. மனைவியிடம் காதலை வெளிப்படுத்த திருமண சான்றிதழை டாட்டூ போட்ட கணவன்!

அவ்ளோ லவ்.. மனைவியிடம் காதலை வெளிப்படுத்த திருமண சான்றிதழை டாட்டூ போட்ட கணவன்!

காதல் பரிசாக திருமண சான்றிதழை டாட்டூ போட்ட கணவன்

காதல் பரிசாக திருமண சான்றிதழை டாட்டூ போட்ட கணவன்

பொருட்களை விட உணர்வுபூர்வமான பரிசை வழங்க வேண்டும் என்றும் யோசித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

காதலர் தினத்தில் தனது காதலருக்கு என்ன பரிசு தரலாம் என்று சல்லடை போட்டு தேடுவார்கள். பூக்கள், கிரீட்டிங் கார்டுகள், பொம்மைகள், நகைகள், கடிதங்கள் என்று தங்களுக்கு பிடித்த எதையும் வாங்கி பரிசாக அளிப்பார்கள். அது போக ஒருசிலர் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைவுகளை சேர்ப்பார்கள். அதில் ஒருசில நெஞ்சை நெகிழச் செய்யும். அப்படியான ஒரு பரிசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

தாய்லாந்தை சேர்ந்த  ஒருவர் மனைவியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு வித்தியாசமான பரிசை வழங்க முடிவு செய்தார். மற்றவர்களை போல தனது மனைவிக்கு பூக்கள் அல்லது சாக்லேட்களைக் கொடுப்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை. கொடுக்கும் பரிசு அசத்தலாக இருக்க வேண்டும் என்று யோசித்துள்ளார்.

அதைக் கண்டு மனைவி ஆச்சரியத்தில் உறைய வேண்டும் என்று நினைத்துள்ளார். பொருட்களை விட உணர்வுபூர்வமான பரிசை வழங்க வேண்டும் என்றும் யோசித்துள்ளார். அப்போது தான் அவருக்கு ஒரு யோசனை வந்துள்ளது.  டாட்டூ குத்திக்கொள்ளலாம் என்று தோன்றியுள்ளது.

பெயரையோ, இனிஷியலையோ குத்துவதை விட அவர்களின் திருமணச் சான்றிதழை பச்சை குத்திக் கொண்டால் என்ன என்று யோசித்துள்ளார். அதன்படி 2023 காதலர் தினத்திற்கு முன்னர் தனது திருமண சான்றிதழை தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.

இதற்காக தாய்லாந்தை சேர்ந்த  வால், மத்திய தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தில் உள்ள கேங் கோயில் உள்ள டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஸ்டுடியோவில் எட்டு மணிநேரம் செலவழித்து தனது திருமண சான்றிதழின் பார்டர் டிசைன் முதல், அதிகாரப்பூர்வ முத்திரை வரை அனைத்தையும் தனது கையில் டாட்டூவாக போட்டுள்ளார்.

இதைப்பார்த்த வாலின் மனைவி ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தார், ஆனால் பின்னர் அந்த டாட்டூவை அவரது அன்பு மற்றும் மரியாதைக்கான சான்றாக  ஏற்று பாசமழை பொழிந்துள்ளார். காதல் வந்துவிட்டால் அதற்காக எதுவும் செய்வார்கள் என்று கேட்டிருப்போம். ஆனால் வால் அதை செய்து காட்டிவிட்டார்.

First published:

Tags: Tattoos