பிரேசில் அதிபர் உடனான வீடியோகாலின் போது தற்செயலாக நிர்வணமாக காட்சியளித்த நபர்

அவர் ஆலோசனை முடிந்தது என்று நினைத்து கேமிராவை ஆஃப் செய்யாமல் இருந்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

பிரேசில் அதிபர் உடனான வீடியோகாலின் போது தற்செயலாக நிர்வணமாக காட்சியளித்த நபர்
  • Share this:
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு குறித்து வீடியோ காலில் ஆலோசனை நடத்திய போது கேமிராவை ஆஃப் செய்ய மறந்த நபருக்கு சங்கடமாக அமைந்தது.

பிரேசிலில் ஊரடங்கு குறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உட்பட அமைச்சர்கள் 10 பேர் வீடியோ காலில் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது ஒரு நபர் தற்செயலாக நிர்வணமாக குளிக்கும் வீடியோ திரையில் தெரிந்துள்ளது. அவர் வீடியோகாலில் கேமிராவை ஆஃப் செய்ய மறந்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

சாவோ பாலோ மாநிலத்தின் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவரான பாலோ ஸ்காஃப், பிரேசிலில் ஊரடங்கு தாக்கம் குறித்து விவாதிக்க அதிபர் போல்சொனாரோ மற்றும் பிற முக்கிய நபர்களுடன் அழைப்பு விடுத்தார்.


இந்த ஆலோசனையின் போது குறுக்கிட்ட அதிபர் கடைசி சதுரத்தில் இருக்கும் உங்களது சகஊழியர் சரியாக இருக்கிறரா என்று பாலோவிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது பாலோ அவரை கவனித்துள்ளார். அதில் அவர் நிர்வணமாக குளிக்கும் வீடியோ திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அவர் ஆலோசனை முடிந்தது என்று நினைத்து கேமிராவை ஆஃப் செய்யாமல் இருந்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

தவறுதலாக நடைபெற்ற இந்த சம்பவத்தின் ஸ்கீரின்ஷாட் அவரின் பெயர் குறிப்பிடமால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading