நோக்கியா போனை விழுங்கிய இளைஞர்.. ஷாக்கான மருத்துவர்கள்

நோக்கியா போன்

இளைஞர் ஒருவர் நோக்கியா போனை விழுங்கியதாக கூறி மருத்துவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 • Share this:
  நோக்கியா போனை விழுங்கிய நபருக்கு அறுவை சிகிச்சை செய்து  போனை அகற்றி மருத்துவர்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

  மனிதர்கள் பொருள்களை விழுங்கும் விநோதமான சம்பவங்கள் அபூர்வமாக நடக்கும். வீட்டில் இருக்கு சிறு குழந்தைகள் அறியாமையின் காரணமாக பட்டன்கள், காசு, இல்லையென்றால் இரும்பு பொருள்களை விழுங்கி விடுவார்கள் இவையெல்லாம் பெற்றோர்களில் அலட்சியத்தால் குழந்தைகள் தெரியாமல் செய்யும் செயல்கள். இளைஞர் ஒருவர் செல்போனை விழுங்கிய அதுவும் கனமான பழைய நோக்கியா மாடல் செல்போனை விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.

  Also Read: காதலியை கொன்று பிளேடால் தோலை அகற்றிய கொடூரன் – சிக்கலான வழக்கில் காதலனை கைது செய்த போலீஸ்

  கோசாவா நாட்டின் ஓல்டு பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்றுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செல்போனை விழுங்கிவிட்டதாக கூறி மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் வயிற்றுப்பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்த நபர் விழுங்கியது  2000-ம் ஆண்டு வெளியான நோக்கியா 3310 மாடல் என்பது தெரியவந்தது.

  ஸ்கேன்


  இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் மூன்று பாகங்களாக இருந்த நோக்கியா போனை மருத்துவர்கள் அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது அந்த நபர் நலமாக உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த இளைஞர் விழுங்கிய போனை ஜீரணிக்க முடியாத அளவுக்கு பெரிய அளவில் இருந்துள்ளதால் கடுமையான வயிற்று வலியை சந்தித்துள்ளார். தற்போது போனை அகற்றினாலும் பேட்டரியில் இருந்து வெளியேறிய அமிலம் வயிற்றில் கலந்திருப்பதால் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: