ஹெல்மெட் அணியாத காவல் அதிகாரி: கேள்வி எழுப்பிய இளைஞருக்கு அடி! வைரல் வீடியோ

ஹெல்மெட் அணியாத காவல் அதிகாரி: கேள்வி எழுப்பிய இளைஞருக்கு அடி! வைரல் வீடியோ
டிராபிக் போலீஸ்
  • News18
  • Last Updated: September 9, 2019, 10:22 PM IST
  • Share this:
பீகாரில் ஹெல்மெட் அணியாத காவல்துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மிக அதிக அளவில் அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது. ஒடிசா, ஹரியானா, டெல்லி ஆகிய பகுதிகளில் 80 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதனால், பல்வேறு பகுதிகளில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்தநிலையில் பீகார் மாநிலம் ஷிக்ஷாக் காலணி பகுதியைச் சேர்ந்தவர் கமல் குமார். அவருக்கு கடந்த இருதினங்களுக்கு முன்னர் புதிய மோட்டார் வாகன விதியின்படி, ரோஷன் குமார் என்ற காவல் அதிகாரி 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இந்தநிலையில், காவல் அதிகாரி ரோஷன் குமார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற கமல் குமார் பார்த்துள்ளார்.


அவரைத் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணியாமல் செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த காவல் அதிகாரி, கமல் குமார் அடித்து இழுத்துச் செல்கிறார். இந்தச் சம்பவம் அனைத்தும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடைபெறுகிறது.


அதனை தொடக்கத்தில் இருந்து வீடியோவாக எடுத்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் ரோஷன் குமாரை பணியிடை நீக்கம் செய்துஉத்தரவிட்டார்.

Also see:
First published: September 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்